ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை நாகராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை நாகராசா

பேரூந்து நிலைய தேனீர்க்கடை உரிமையாளர் - கீரிமலை

வயது 7622 ஆகஸ்ட், 1939 – 17 மே, 2016

பிறந்த இடம்
சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம்
கீரிமலை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சண்டிலிப்பாய் மண்டுமண்டையைப் பிறப்பிடமாகவும், கீரிமலை, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகராசா அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(துரையர்) சிவபாக்கியம்(பாக்கியம்) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவர்னாம்பாள்(பாப்பா) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கோனேஸ்வரன்(முன்னாள் உதவி அரச அதிபர்- புதுக்குடியிருப்பு, Kones Match அக்கடமி ஸ்தாபகர், தொழிற்பயிற்சி பிரிவு பணிப்பாளர் - சமூகசேவைகள் அமைச்சு), கேதிஸ்வரன்(பிரான்ஸ்), நகுலாம்பிகாதேவி(அமுதா- கொழும்பு), நகுலேஸ்வரன்(ஈசன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராஜா(சிவம், ஓய்வுபெற்ற கிராமிய வங்கி முகாமையாளர் - தெல்லிப்பழை), அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(CTP ஊழியர்), இராஜநாயகி, செல்வநாயகி, மற்றும் செல்லத்துரை(CTP ஊழியர்), புவனேந்திரா(புவனம்), பவானி, Dr.சிவபாலன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விமலச்சந்திரன், பிரியதர்சனி, நவறஞ்சினி, நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தீபன், வினோ, தர்சனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மிதுராங்கன், சுருதி, கேசியா, நவீஸ், மோனீசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-05-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து மு.ப 10:00 மணிவரை கொழும்பு கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியிலிருந்து பி.ப 02:00 மணிவரை Dr. Sivabalan(Rani House), Nageswari Lane, Dr. Subramaniam Road, Chunnakam, Jaffna என்னும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கீரிமலை செம்பொன்வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.