மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை பரமலிங்கம்
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 7530 நவம்பர், 1943 – 12 ஜூன், 2019
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை பங்கிரை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பவதி(தேவி)அவர்களின் பாசமிகு கணவரும்,
பிருந்தா(சுவிஸ்), காலஞ்சென்ற திலீபன், நிறோஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா, பாலசுந்தரம் மற்றும் முத்துலிங்கம்(இலங்கை), அரியமலர்(இலங்கை), தவமலர், துரைசிங்கம், தனபாலசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவசத்தியநாதன்(சுவிஸ்), நீரஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிருத்திகா, துசாந் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பத்மாவதி மற்றும் ஞானம்பிகை, சின்னதம்பி, வீரசிங்கம், கலாவதி, சசிரேகா(சுவிஸ்), அருளானந்தம், தர்மபாலன், நவநீதராசா, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-06-2019 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் மகிந்த மலர்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த தெல்லிப்பழை பங்கிரை கட்டுவனில் புகழ் பூத்த சீமான் திரு.வேலுப்பிள்ளை அவர்தம் பாரியார் திருமதி தெய்வானை அவர்களின் அருமைப் புத்திரனாக 30/Nov/1943 ஆம் ஆண்டில் திரு.பரமலிங்கம் அவர்கள் இவ் அழகிய பூமியில் அருளம்மா, பாலசுந்தரம், முத்துலிங்கம், அரியமலர், தவமலர், துரைசிங்கம், தனபாலசிங்கம் போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சேர்ந்து தொழிலில் ஈடுபட்டதுடன்,திரு.திருமதி சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளான புஸ்பவதி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக பிருந்தா, திலீபன், நிறோஜன் போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அவர்களின் விருப்பத்தின் காரணமாக சிவசத்தியநாதன், நீரஜா என்பவரைத் திருமணம் முடித்து வைத்து கிருத்திகா, துசாந் போன்ற பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் நில அளவையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும், பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 12.06.2019 இல் 75 வயதில் கொழும்பில் இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கட்டுவன் தந்த
...... கடமை வீரன்
பட்டுப் போல்
...... பளபளத்து
பண்பாகப் பேசி
.......பாரில் உயர்ந்து
விடை பெற்றீர்
.......விழிநீர் சிந்திட
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

