மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை இராசதுரை
ஓய்வுபெற்ற அதிபர்
வயது 711 ஆகஸ்ட், 1948 – 22 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- வரணி வடக்கு
- வாழ்ந்த இடம்
- மீசாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி வடக்கு கண்ணகை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு வேம்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசதுரை அவர்கள் 22-07-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமசுந்தரி(காமினி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிருஜன்(ஆசிரியர்- யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), மேருதிகா(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம்- கரவெட்டி), தர்மதர்சனன்(விவசாயப் போதனாசிரியர்- வவுனியா), சமிதா(மாணவி- கோப்பாய் கல்வியியல் கல்லூரி இறுதியாண்டு), தனுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசேந்திரம், கந்தசாமி, சந்திரலேகா, குணராசா சிவயோகராணி, சதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கபேசனா, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கருணகிரி, சூரியகுமாரி(அதிபர்- கிளி/முருகானந்தாக் கல்லூரி), குமுதமனோகரி(ஆசிரியை- யா/ திருக்குடும்பக் கன்னியர் மடம்), சுவேந்திரன், காலஞ்சென்ற சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருத்விகா, சஞ்ஜனா, சகாரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
அமரர் க.வே. இராசதுரை அவர்களின் வாழ்க்கை வரலாறு...
1948/08/01ம் நாள் வரணிவடக்கில் ஒரு ஒளிக்கீற்று உதயமாகியது. ஆம்
வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளைக்கு மூத்தமகனாய் வறுமையிலும் செம்மைகாண
பிறந்தவர்தான் எல்லோராலும் பெரியண்ணன் என்றழைக்கப்படும் இராசதுரை மண்ணில்
நல்லவண்ணம் வாழும் வல்லமையோடு தத்தித் தளர்நடை நடந்து பள்ளி வாழ்க்கையைத் தொடர
யா/வரணி மகா வித்தியாலயத்தில் கால் பதித்து உயர்கல்விக்கு யா/நெல்லியடி
இருதயக் கல்லூரியினைத் தேர்ந்தெடுத்து வர்தகப்பிரிவில் கற்றுத் தேர்ந்தபோதும்
பல்கலைக்கழகம் கிடைக்காத நிலையில் குடும்ப வறுமையைப் போக்கத் தொழில்
செய்துகொண்டே தன் கல்விப் பயணத்தைத் தொடர்ந்து வெற்றியும் கண்டார். இதன்
பயனாக தனது முப்பதாவது வயதில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி தனது
பிரதேசத்தில் முதன்முதலாகப் பல்கலை சென்ற வரலாற்றைப் பதித்துக் கொண்டார்.
முழுக் கதையையும் வாசிக்க
1985ம் ஆண்டில் ஆசிரியத் தொழிலில் கால்பதித்து கொழும்பு அல்ஹூசேனியா முஸ்லிம்
மகா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்றுக் கொண்டார்.
1990இல் இடமாற்றம் பெற்று யா/வீரசிங்கம் மகா வித்தியாலத்தில் பணி தொடர்ந்து
யா/மட்டுவில் வடக்கு அ.த.க.பாடசாலையில் கடமைநிறைவேற்று அதிபராகி 2000 ஆண்டில்
தரம்2 ॥ அதிபர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டு
திறம்படத் தன் பணியாற்றி 2008/07/31உடன் அரசசேவையிலிருந்து ஓய்வு பெற்றபோதும்
சமூகத்திற்கான
கல்விப்பணியை இறுதிவரை ஆற்றிய மகானிவர்
அதுமட்டுமன்றி மத்தியஸ்தர் சபையிலும் சமூகத்திற்கான பணி தொடர்ந்து
மக்கள் மனதில் இடம்பிடித்துக் கொண்ட பெருமைக்குரியவராய் இன்று இறையடி
சேர்ந்துள்ளார்
இவரின் குடும்ப வாழ்வினை நோக்கில் 1986ம் ஆண்டில் மீசாலை வடக்கு
வேம்பிராயைச் சேர்ந்த கதிரவேலு பரமேஸ்வரி தம்பதியரின் மூத்த மகள்
சிவகாமசுந்தரியைக் (காமினி) கரம்பற்றி
நிருஜன்,மேருதிகா,தர்மதர்சனன்,சமீதா,தனுசன் ஆகிய ஐவரை பிள்ளைகளாகப் பெற்று
அவர்களின் உயர்விற்காகவே ஊன் உறக்கமிண்றி உழைத்து முதலிருவரையும்
இல்வாழ்க்கைக்குள் புகுத்தி பிருத்விகா,சஞ்ஜனா, ஷகாரன் ஆகியோரைப்
பேரப்பிள்ளைகளாகவும் கபேசனா,பிரபாகரன் ஆகியோரை மருமக்களாகவும் கண்டு
மகிழ்ந்தவர்.
2020/06/02 இல் நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்து
வாழ்வா சாவா என்ற போராட்டத்திற்கு மத்தியில் இன்று இறைவன் தன்னடியில்
இளைப்பாற அழைத்துக் கொண்டான்
"பிறந்தவர் அனைவரும் இறப்பது இயல்பே" என்ற முதுமொழியை ஏற்று அமைதி கொள்வோம்.
ஓம் சாந்தி !ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

