31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை சீனிமுத்து
வயது 805 செப்டம்பர், 1937 – 6 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- செம்பியன்பற்று
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சீனிமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
ஆத்மா அணையுமட்டும் - எம்மை
அகக்கருவில் சுமந்தவளே!
உன் ஆத்மா அணைந்து
ஆனதம்மா ஓர் திங்கள்!
நீங்கள் கோடி மறைந்தாலும்
நிரைந்திடுமோ?உன் நினைவு
வங்கக்கடல் அலை போல்
வான் உயர முட்டுதம்மா!
தாயாகி, தந்தையுமாகி- எம்மை
தரணிக்குத் தந்தவளே
போனாயோ சிவன் மகன்
புகலிடத்தைத் தேடி..?
எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்ட எங்கள் அன்னையின் மறைவுச்செய்தியைக் கேட்டு எங்கள் இல்லத்திற்கு வருகைதந்து எங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், அனுதாபச்செய்திகளை தொலைபேசி மூலம் தெரிவித்தவர்களுக்கும், வேண்டிய உதவிகளை வேண்டியவாறு செய்து அன்னாரின் இறுதிக்கிரியையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளிலும் கலந்து கொண்டு எமக்கு எல்லா விதத்திலும் ஆறுதல் அளித்த உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட அனவருக்கும், இறுதிக்கிரியை ஒழுங்குபட நடாத்திய Manikkratnam(Manikkam Funeral Directors LTD) அவர்களுக்கும், அம்மாவின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டிய அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

