1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து
வயது 6820 மார்ச், 1941 – 18 ஜூன், 2009
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக7ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து மாதம் சுமந்து எங்களைப் பெற்ற தாயே!
பகல் இரவாக விழித்திருந்து வளர்த்தீர் எம்மை
நாம் பக்கத்தில் இருந்து பார்க்கவில்லை உம்மை
தேவியும், மதியும் மருமகனும் கூடவே நிற்க
பேரனை இழந்த துயரம் தீர தேடியே
போனீர் பேரனை நாடி
பெற்ற கடன் செய்யவில்லை நாமே
வாக்கரிசி போட வந்தோம் அம்மா
மற்றவர்கள் யாரும் பார்க்கவில்லை அம்மா
தாய்நாட்டிற்கு வந்த இடியால் தானே - எம்
தாயை இழந்தோம் நாமே இப்போ
குஞ்சு என்று அழைத்திடுவார் உம்மை
கொஞ்சியே பேசிடுவீர் அம்மா
செவ்வரத்தம் பூப்போல சிரிப்பீர் அம்மா
சிவக்கொழுந்துவாம் எங்கள் அம்மா
எம் தாயை இனி எங்கே
காண்போம் அம்மா
மன்னித்துவிடுவீர் அம்மா மன்றாடி நின்றோம் - நாமே
மீண்டும் ஒரு பிறப்பே உண்டால்
நாம் பிறப்போம் உம் மடியில் தானே அம்மா.
அன்னாரின் முதலாம் ஆண்டு திதியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 07.07.2010 புதன்கிழமை அன்று இலண்டனில் உள்ள அவரது மகள் இந்திராணி இல்லத்தில் நடைபெறும்.
பிரிவால் தவிக்கும் உறவுகள் தங்கராசா - விஜயகுமாரி, கீதோபன், குபேரமேனன், சறோஜினிதேவி, நவரத்தினம் - இந்திராணி, நர்மதா, தில்லைநாதன் - துஸ்யநத்தினி, விக்கினேஸ்வரன் - நாகபூசணி, டினோசன், சாயுசன், மாண்சிகா, இராஜேஸ்வரன் - றஞ்சிதா, மிலான், அஸ்வினி, கஜேந்திரன், செந்திகுமார் - சூரியகுமாரி, குகன் - நாகேஸ்வரி, மிதுசன்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

