ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலுப்பிள்ளை கண்ணகை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை கண்ணகை

வயது 7531 டிசம்பர், 1943 – 29 அக்டோபர், 2019

பிறந்த இடம்
மண்டைதீவு 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கந்தர்மடம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கண்ணகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பல தவமிருந்து- என்னை
அருமையாய் தான் பெற்றெடுத்து- ஆளாக்கிய
எனது அன்புத் தாயே- ஆண்டு ஒன்று
ஆனதம்மா உங்களை பிரிந்து- ஆனாலும்
ஆறவில்லை எம் கவலை

பந்தம் நிறைந்த பரம்பரையின்- வம்ச
விருட்சத்தில் விளைந்திட்ட வித்தகி- நீங்கள்
குவலயத்தை ஏனம்மா துறந்தீர்கள் - இங்கே
குலைந்தே நாங்கள் போனோம் அம்மா
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கும் உங்கள் அன்பு உறவுகள்..

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த மண்டைதீவு 8ஆம் வட்டாரத்தில் 31/DEC/1943 ஆம் ஆண்டில் திரு.திருமதி சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அழகுக் குழந்தையாக கண்ணகை அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சீதேவிப்பிள்ளை, கெங்காதரன், வியாகரத்தினம், ரதிதேவி போன்ற உடன்பிறப்புகளுடன் கூடி ஒன்றுபட்டு வளர்ந்து பெரியவளாகியதும், திரு.திருமதி சின்னப்பா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகன் வேலுப்பிள்ளை எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தார்.

இவர்கள் இருவரின் வாழ்க்கைப் பயனத்தில் வம்ச விருத்தியாக ஸ்ரீகௌரி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து தவக்குமார் என்பவரை திருமணம் முடித்து வைத்து சகானா,கார்த்தியா,ஷார்மி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளை, சகோதரங்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 29.10.2019 இல் 75 வயதில் கந்தர்மடத்தில் மரணம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 29 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.