ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை முத்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை முத்தையா

வயது 9316 டிசம்பர், 1925 – 30 அக்டோபர், 2019

பிறந்த இடம்
கரவெட்டி கிழக்கு
வாழ்ந்த இடம்
கரவெட்டி கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை முத்தையா அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், இராமு இலட்ச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

கணநாதர், பாரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எழிலரசி, மணிவாசகன், வாசுதேவன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகராஜா, கலானந்ததேவி, யாழினி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகன்ஜா, லாவன்ஜா, நிதர்சன், மதுரன், மகிழினி, முகில், ஓவியன், மாதுழன், மகிழன், சுகந்தன், ஜெயகீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கிரன், ஆதிரையன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கரவெட்டியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கரவெட்டியில் 16/DEC/1925 ஆம் ஆண்டில் திரு.திருமதி வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.முத்தையா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் கணநாதர், பாரதி போன்ற சகோதரர்களுடன் கூடப் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன்,திரு.திருமதி இராமு இலட்ச்சுமி தம்பதிகளின் அழகிய பெண்ணான சின்னப்பிள்ளை என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக எழிலரசி, மணிவாசகன், வாசுதேவன், வாசுகி எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

பிள்ளைகள் பெரியவர்களானதும் யோகராஜா, கலானந்ததேவி, யாழினி, கருணாகரன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சுகன்ஜா, லாவன்ஜா, நிதர்சன், மதுரன், மகிழினி, முகில், ஓவியன், மாதுழன், மகிழன், சுகந்தன், ஜெயகீசன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும் கிரன், ஆதிரையன் எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 30.10.2019 இல் 93 வயதில் கரவெட்டியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

கரவெட்டி தந்த கனிவு உள்ளமே
வரவேற்கும் வள்ளல் உயிரே
பரந்துபட்ட அறிவு கொண்டு
கரம்பற்றி நடத்திய கருணை உறவே
நிரந்தரமாகப் பிரிந்தீரே எமை விட்டு

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.