மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேதவனம் மார்க்கண்டு
இளைப்பாறிய அதிபர், எழுதுமட்டுவாழ் வடக்கு
வயது 8716 ஜூன், 1932 – 16 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- உசன், Gien
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட வேதவனம் மார்க்கண்டு அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் Gien ல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேதவனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கார்த்திகேசு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற முத்துப்பிள்ளை(முத்து ரீச்சர்) அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி அவர்களின் அன்புத் தந்தையும்,
சின்னையா நவரத்தினம்(சிவா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, பொன்னையா, இரத்தினம், ஆறுமுகம், மாணிக்கம் மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, விநாசித்தம்பி மற்றும் சிவயோகநாதன், இராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட சாவகச்சேரி கல்வயலில் 16/JUN/1932 இல் வேதவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.மார்க்கண்டு அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் முருகேசு, பொன்னையா, இரத்தினம், ஆறுமுகம், மாணிக்கம், குமாரசாமி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், கார்த்திகேசு நாகமுத்து தம்பதிகளின் மகள் முத்துப்பிள்ளை(முத்து ரீச்சர்) எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வாசுகி எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து சின்னையா நவரத்தினம் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து மகிழ்ச்சியாக உசனில் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எழுதுமட்டுவாழ் வடக்கு அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 16.07.2019 இல் 87 வயதில் பிரான்ஸில் உள்ள Gien நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
அதிபர் சேவையில்
அற்பணிப்புடன் உழைத்து வாழ்ந்து
அகிலத்தில் உயர்ந்த
அன்னை மனம் போல்
அன்புடன் மிளிர்ந்து
அகிலம் துறந்த பாச உறவே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

