ஆறுதல்
இறப்பு21 ஏப்ரல், 2019

கார்த்திகேசு விக்னேஸ்வரநாதன், விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி

பிறந்த இடம்
வேலணை 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
பேர்ண்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், படிப்பறிவு கூடிய மக்களாக விளங்கும் இடமும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு , பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த வேலணை 5ஆம் வட்டாரதில் கார்த்திகேசு மகாலட்சுமி தம்பதிகளுக்கு அருமை மகனாக விக்னேஸ்வரநாதன் அவர்கள் பாலசுந்தரம், மலர்மகள், நித்தியானந்தன், கலைமகள்,தனலட்சுமி, பேரின்பதாசன், தியாகேஸ்வரன் எனும் உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த தீவில் குழந்தையாக அவதரித்தார்.

அதேபோல அதே இயல்புகளையும், அழகையும் பண்பையும் கொண்டதுமான அழகிய தீவான புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் நடராசா ராசம்மா தம்பதிகளுக்கு அழகிய தேவதையாக கேதாரகௌரி அவர்கள் நந்தகுமாரன், தர்மபாலசிங்கம், பாலசரஸ்வதி, இரத்தினசிங்கம், ராசலெட்சுமி,யோகேஸ்வரி, ஜெயலெட்சுமி, நாகேஸ்வரி போன்ற உடன் பிறப்புடன் இவ் அழகிய தீவில் அவதரித்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர்கள் இருவரும் சிறுவயதில் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றம் உடைய ஆணாகவும், அழகிய பெண்ணாகவும் வளர்ந்ததும் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்ததன் பயனாக கார்த்திகா, கயூரன், கஸ்தூரன் ஆகிய அழகிய பிள்ளைகளை பெற்று இருவரும் கண்ணெனப் பாதுகாத்து வளர்ந்தனர். இவர்கள் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன், குடும்ப வளர்ச்சிக்காக சுவிஸ் நாட்டில் கடும் கஸ்ரப்பட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்கள்.

இவ்வாறு பிள்ளைகளுடன் மகிழ்வுடன் வாழ்ந்து வந்த இவர்கள் சொந்த நாட்டிற்கு விடுமுறையில் சென்ற வேளை எதிர்பாராத விதமாக 21-04-2019 இல் கொழும்பில் நடந்த குண்டு வெடிப்பில் அகாலமரணம் அடைந்தனர். இவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"அன்புத் தம்பதிகள்
.....அழகு உயிர்கள்
அகால மரணம்
.....அழைத்துச் சென்றது
திடீரென நடந்த
....குண்டு வெடிப்பில்
திகைப்பை ஏற்படுத்தி
....கண்ணீர் சிந்த பிரிந்தது உயிர்கள்"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.