1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்கினேஸ்வரலிங்கம் தர்மலிங்கம்
வயது 5412 பிப்ரவரி, 1965 – 7 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Épinay-sur-Seine ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் விக்கினேஸ்வரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாடாத மலராய் வாசம் தந்தீர்!
வஞ்சகம் ஏதுமின்றி பாசம் தந்தீர்!
வசதியாய் நாம் வாழவாழ்வு தந்தீர்!
பாதி வழிவிட்டுசென்று வலியும் தந்தீர்!
அன்பின் உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா!
இறைவன் உங்களை ஏன் அழைத்தார் அப்பா!
இவ்வுலகில் எம்துயர் போக்க
யார் வருவார் அண்ணா!
கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களை
தவிக்க விட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே!
உங்களுக்கு நிகர் யார் ?
உங்கள் சிரித்த முகத்தையும், வேடிக்கையான
பேச்சையும் எங்கே காண்போம்!
மீண்டும் ஒருமுறை உங்கள் திருமுகம்
காண உள்ளம் பரிதவிக்கின்றது !
என் செய்வோம் யாரை நோவோம் விதியா !
ஆண்டு ஒன்று ஆனாலும்
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா...
என்றென்றும் உங்கள் நினைவுகள்
அழியாது எம்முடன் வாழும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
— சகோதரி, குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த மண்டைதீவில் 12/FEB/1965 இல் திரு.திருமதி தர்மலிங்கம் சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.விக்கினேஸ்வரலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த தீவில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நடேஸ்வரலிங்கம், யோகேஸ்வரலிங்கம், ராஜேஸ்வரலிங்கம், லோகேஸ்வரி மற்றும் ஈஸ்வரலிங்கம்,பாலரத்தினம் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி கணேசபிள்ளை மீனலோசினி தம்பதிகளின் அன்பு மகள் மதிவதனி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தர்ஷா, கஜிதா, தனுஷா, நிலக்ஷன், வினோஷன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார்.இவ்வாறு மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07.08.2019 இல் 54 வயதில் பிரான்ஸ்ஸில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
விடியலில் பூத்த பூவே
வடிவெனும் கற்பூர தீபமே
நொடிப் பொழுதும் எமை மறவாத
கடிமனமற்ற காந்தல் மலரே
அடிமனதை ரணமாக்கி
மடிந்தீரே எம் மகானே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

