மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விக்கினேஸ்வரன் மதியாபரணம்
வயது 5417 ஜூன், 1964 – 17 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் மதியாபரணம் அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று Montreal இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் பராசக்தி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற சந்திரவதனா, மதிவதனா(புங்குடுதீவு), பங்கசவதனா(Montreal), ரதிவதனா(புங்குடுதீவு), சதாசிவநாதன்(Toronto), சிவகுமார்(சிவா- Welfare Office,Toronto) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சின்னத்தம்பி(Colombo), காலஞ்சென்ற சிவானந்தராசா, தங்கராசா(Montreal), பரமேஸ்வரன்(புங்குடுதீவு), சந்திரகுமாரி(Toronto), நிர்மலா(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரங்கா, மதிகேசவன், ஹரிசனன், றஜீன்- சாகிதா, றீகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தயா, காலஞ்சென்ற விஜயன், அருள், கவிதா, துளசி, லாவன்யா, தாஸ், தீபன், சங்கர், உஷா, அருள், துசியந்தி, காலஞ்சென்ற துசியந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மாயன் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தில் 17-06-1964 இல் மதியாபரணம் பராசக்தி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் விக்கினேஸ்வரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த தீவில் அவதரித்தார்.
மேலும் மோகன் என செல்லமாக அழைக்கப்படும் இவர் அன்பும் அழகும் நிறைந்ததுடன் சந்திரவதனா, மதிவதனா, பங்கசவதனா, ரதிவதனா, சதாசிவநாதன், சிவகுமார் ஆகிய உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனனார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும், ஒழுக்கமும், நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும், அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார்.
குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு அனைவருக்கும் உதவிகள் செய்து மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 17-04-2019 புதன்கிழமை அன்று 54 வயதில் கனடாவில் உள்ள montreal நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"புங்குடுதீவின்
புத் துயிரே
புகழ் பரப்பி
பூத்த மலரே
பூமியில் வாழ்ந்து
புது மணம் வீசி
பூவுடல் இப்போது
போனது பிரிந்து "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

