மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயலட்சுமி ஆறுமுகசாமி
சங்கீத பூஷணம், பழைய மாணவி யூனியன் கல்லூரி தெல்லிப்பழை, ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை யூனியன் கல்லூரி ஸ்தாபகர் மதுரகான சபா- பிரித்தானியா
வயது 8023 ஆகஸ்ட், 1939 – 11 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- Mitcham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி ஆறுமுகசாமி அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற உருத்திராபதி, காயத்திரி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற சுப்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
முருகதாஸ், மாதவன், காலஞ்சென்ற வேந்தன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
வாஹினி, லதாஜினி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, மற்றும் சபாரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
சங்கீர்த், கீதன், பதுமன், மதுரன், ஸ்ருதி, ஸ்வரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான துர்க்கை அம்மன் ஆலயம் அமைந்த தெல்லிப்பழையில் 23/AUG/1939 இல் திரு.திருமதி உருத்திராபதி காயத்திரி தம்பதிகளின் அன்பு மகளான விஜயலட்சுமி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அழகிய ஆண் அழகான ஆறுமுகசாமி அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக முருகதாஸ்,மாதவன்,வேந்தன் எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து வாஹினி, லதாஜினி, கவிதா என்பவரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த சங்கீர்த், கீதன், பதுமன், மதுரன், ஸ்ருதி, ஸ்வரா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்றாக படிக்கும் இவர் யூனியன் கல்லூரி பழைய மாணவியான இவர் அக் கல்லூரியில் சங்கீத ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன், சங்கீத பூஷணம் விருது பெற்ற சிறந்தவரும்,மதுரகான சபா ஸ்தாபகராகவும் விளங்கினார், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அன்பு பாசம் நிறைந்து காணப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு வாழ்ந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 11.09.2019 இல் 80 வயதில் பிரித்தானியாவில் உள்ள Mitcham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
”இனிமைக் குயிலே இளம் தென்றலே
கனிவு உள்ளமே கருணை மனமே
இசையுடன் வாழ்ந்த சங்கீத பூஷணமே
அசையும் பொருள் அடங்கும் உம் இனிமைக் குரலில்
அன்பு அம்மா இசையில் வாழ்கிறீரே”
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

