ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

விஜயலட்சுமி நாகரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஜயலட்சுமி நாகரத்தினம்

இளைப்பாறிய உப அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை, முன்னால் ஆசிரியை கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா கல்லூரி

வயது 8723 டிசம்பர், 1931 – 13 மே, 2019

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
Greenford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலட்சுமி நாகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை - வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!

அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கொக்குவிலில் மாத்தையா செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளுக்கு அன்பு மகளாக விஜயலட்சுமி அவர்கள் 23/DEC/1931 ஆம் ஆண்டில் இவ் அவனியில் நாகலிங்கம், பவளம்மா, சரோஜினிதேவி எனும் உடன் பிறப்புகளுடன் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் மயிலு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான நாகரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து ஆருயிர் மனைவியாக மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து நந்தகோபன், ராதை, நந்தகுமாரன், நந்ததயாளன் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்து மாலதி, ஜெகதீஸ்வரன், சசிலதா, டிலானி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமியாக குறையின்றி கடமைகளை ஆற்றி கோகுலன், கோபியா, யொசிக்கா, தியோ, ஜெனிக்கா போன்ற அன்புப் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் Vijayam Teacher என அன்பாக அழைக்கப்படும் இவர் கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம்,கொழும்பு விவேகானந்தா கல்லூரி போன்றவற்றில் ஆசிரியையாக கடமை ஆற்றியதுடன்,கொக்குவில் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலையில் உப அதிபராக கடமையாற்றி ஓய்வு நிலையும் அடைந்தார், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார். மன வருத்தம் ஏற்படும் போது ஆறுதல் தந்து உருகிய உயரிய உறவு சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 13.05.2019 இல் 87 வயதில் பிரித்தானியாவில் உள்ள Greenford நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அழகிய முகமே
......அன்பு உள்ளமே
அறிவில் சிறந்த
......அன்னை மனமே
அறிவைப் புகட்டி
......அகம் மகிழ்ந்து
அகிலம் துறந்தீர்
......ஆருயிர் உறவே"

பிற அறிவித்தல்கள்

  1. 22 மே, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.