ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

விஜயரூபி மகேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஜயரூபி மகேந்திரன்

வயது 717 ஜூன், 1948 – 4 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
Lugano

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயரூபி மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் செல்வமே
உன்னோடு நான் வாழ்ந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மண்ணோடு நான் போகும் நாள்
வரையும் நிலைத்திருக்கும்.

பள்ளிச்சிறுவர்களாய் ஆரம்பித்து,
பாடசாலை மாணவர்களாகி,
கல்லூரித் தோழர்களாய் வளர்ந்த
எம் அன்பு இறுதியில்
காதலாய் மலர்ந்து வளர்ந்து
நாம் ஒன்றிணைந்தோம்.

மனைவிக்கு மனைவியாய்,
தாய்க்குத்தாயாய்,தங்கைக்குத்தங்கையாய்,
என் வலது கரமாக இருந்து
என்னை வழிநடத்திய என் செல்வமே
காலன் உன்னைப் பறித்துவிட்டானே..

இன்று சிறகொடிந்த பறவைபோல்,
திசை தெரியாத்தோணிபோல்,
யாருமற்ற அனாதையாக நிற்கின்றேனே....
என் குரல் கேட்கின்றதா விஜி..?????

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"

— கணவர்

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் உரும்பிராயில் 07/Jun/1948 இல் திரு.திருமதி விஸ்வலிங்கம் சின்னராசு தம்பதிகளின் அருமை மகளாய் விஜயரூபி அவர்கள் சிவலோகநாதன், திரவியம், இன்பராணி, சந்திரலீலா, கலாநிதி போன்றவர்களின் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி நமச்சிவாயம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனான திரு. மகேந்திரன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சிவகாமி,ஸ்ரீராஜ்,கஸ்தூரி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து வதனகுமாரன், நிருஷா, கிறிஸ்ரோப் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து நிஷாரா, கபிலன், அரவிந், அஞ்ஜலி, காவியா, அஸ்வினி, ஆரணி, கம்பன், அவனீஷ் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன்,அனைவருக்கும் உதவி செய்வதில் அலாதி விரும் உடைய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர்04.08.2019 இல் 71 வயதில் சுவிஸ்லாந்தில் உள்ள Lugano நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அன்பு முகமே அழகு மதியே
நின் சிரிப்பு நிழல் மரமே
கண் எனக் காத்து
காலத்தில் உயரப் பார்த்து
கடவுளின் அடி புகுந்து
நிலைத்தீர் எம் மனங்களில்
நிழல் தந்த பெரு விருட்சமே.

பிற அறிவித்தல்கள்

  1. 4 ஆகஸ்ட், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 3 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 1 ஆகஸ்ட், 20223ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.