மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயரட்ணம் பொன்னம்பலம்
வயது 6716 அக்டோபர், 1953 – 26 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- நெடுங்கேணி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் பொன்னம்பலம் அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரவியம், நல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணபாமா(பபு) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனந்தினி(கனடா), ஹந்துஜா(அவுஸ்திரேலியா), ஹரேஷனன்(சரவணன்)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டினேஷ்காந்த்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்வராசா(இலங்கை), வெண்மதிராஜா(சுவிஸ்), சிறீஸ்கந்தராசா(சுவிஸ்), செல்வகுமாரி(கனடா), புஸ்பராசா(சுவிஸ்), அருந்தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோஜதேவி(இலங்கை), ரஞ்சித்குமாரி(சுவிஸ்), சத்தியகாந்தா(சுவிஸ்), றேணுகுமார்(கனடா), கெளசலாகுமாரி(சுவிஸ்), யாழினி(சைலி- சுவிஸ்), ஜெயாநிதி(கனி- லண்டன்), ரகுலகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதியஷ்சிறி(கனடா), அகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

