ஆறுதல்

மரண அறிவித்தல்

விக்கினராசா சச்சிதானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விக்கினராசா சச்சிதானந்தன்

SLPS- I, முன்னாள் யாழ்/இணுவில் இந்துக்கல்லூரி அதிபர்

வயது 701 ஜூன், 1948 – 6 மே, 2019

பிறந்த இடம்
கரம்பன்
வாழ்ந்த இடம்
ஏழாலை சூராவத்தை, சுண்டுக்குழி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், சூராவத்தை, சுண்டுக்குளி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினராசா சச்சிதானந்தன் அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விக்கினராசா மங்களம் தம்பதிகளின் ஏகபித்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சவுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைமகள்(ஓய்வு நிலை ஆசிரியை- யாழ்/ஸ்கந்தவரோதயாக்கல்லூரி, யாழ்/கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயா) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. மயூரதி(தேசிய வைத்தியசாலை- கொழும்பு), அரிகரன்(இலங்கை கணக்காளர் சேவை) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சயந்தன்(பொறியியலாளர்- Global Digital(Pvt) Ltd) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சபாநாதன்(நீர்கொழும்பு), தில்லையம்பலம்(கொழும்பு), கனகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சரோஜினி தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேலணைச் சேர்ந்த கனகநாயகம் பானுமதி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

சுந்தரலட்சுமி, கமலாதேவி(நீர்கொழும்பு), கனகசபாபதி(கனடா), நடராஜா, காலஞ்சென்றவர்களான கணேசன், மகேசன், கருணாகரன், சிவகுமாரன் மற்றும் பரமேசன்(கனடா), பூவதி(ஜேர்மனி), கமலாம்பிகை(ஜேர்மனி), வதனி(பங்கையற்செல்வி), வனிதா, வசந்தினி, கலைச்செல்வன், வனஜா, வசந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை நடராஜா(சுருவில்), சீதையம்மா சதாசிவம்(சுண்டுக்குளி), பொன்னம்மா கந்தையா(மானிப்பாய்), மாணிக்கம் சுப்பையா(சுருவில்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற வீரசிங்கம், தங்கரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

வெண்பா அவர்களின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2019 புதன்கிழமை மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

யா/அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம்- ஆசிரியர், 01-09-1971
இ/பலாங்கொடை ஜெயவாணி ம.வி- ஆசிரியர், 01-01-1974
இ/பரிலூக்கா ம.வி- ஆசிரியர், 01-02-1974
கொ/கொம்பனித்தெரு றோ.க.த.க.வி- ஆசிரியர், 01-01-1976
கொ/பம்பலப்பிடி இந்துக் கல்லூரி- ஆசிரியர், 01-04-1979
யா/யூனியன் கல்லூரி- ஆசிரியர், 01-01-1982
யா/யூனியன் கல்லூரி- ஆசிரிய ஆலோசகர், 01-09-1985
யா/வறுத்தலைவிளான் அ.மி.த.க.வி- தரம் III அதிபர், 01-01-1991
யா/அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்- தரம் II அதிபர், 01-02-1991
யா/மல்லாகம் மகா வித்தியாலயம்- தரம் IC அதிபர், 05-11-1993
தி/விவேகானந்தா கல்லூரி- தரம் IAB தற்காலிக இணைப்பு, 05-01-1998
யா/மல்லாகம் மகா வித்தியாலயம்- தரம் IC அதிபர், 01-01-1999
யா/நடேஸ்வராக் கல்லூரி- தரம் IAB அதிபர், 07-04-2000
யா/இணுவில் இந்துக்கல்லூரி- தரம் IC அதிபர், 05-09-2003

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும்,நெல்வயல்கள்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்.கரம்பனில் 01/JUN/1948 இல் விக்கினராசா மங்களம் தம்பதிகளுக்கு அறிவுப் புதல்வனாக சச்சிதானந்தன் அவர்கள் சபாநாதன், தில்லையம்பலம், கனகாம்பிகை, சரோஜினிதேவி ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சுப்பிரமணியம் சவுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகள் கலைமகள்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து Dr.மயூரதி(தேசிய வைத்தியசாலை-கொழும்பு),அரிகரன்(இலங்கை கணக்காளர் சேவை) ஆகிய பிள்ளைகளை பெற்று வளர்த்து மகிழ்ந்து வாழ்ந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் படித்து உயர்நிலை அடைந்ததுடன்,ஆசிரியராக முதல் முதலில் யாழ்/அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலத்தில்(01.09.1971)கடமையாற்றியதுடன்,இ/பலாங்கொடை ஜெயவாணி ம.வி,இ/பரிலூக்கா ம.வி,கொழும்பு/கொம்பனித்தெரு றோ.க.த.க.வி,பம்பலப்பிடி இந்துக் கல்லூரி,யாழ்.யூனியன் கல்லூரி(01.01.1974 - 01.01.1982) காலப்பகுதியில் ஆசிரியக் கடமை ஆற்றியதுடன்.யாழ்/யூனியன் கல்லூரி ஆசிரிய ஆலோசகராகவும்(01.09.1985) கடமையாற்றினார்.இத்துடன் யாழ்/வறுத்தலைவிளான் அ.மி.த.க.வி, அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்,மல்லாகம் மகா வித்தியாலயம், தி/விவேகானந்தா கல்லூரி, யாழ்/நடேஸ்வராக் கல்லூரி ஆகியவற்றில் (01.01.1991 - 07.04.2000) வரை அதிபர் சேவையை சிறப்புற செய்ததுடன்,யாழ்/இணுவில் இந்துக்கல்லூரியில் (05.09.2003) வரை கடமை புரிந்து ஓய்வு நிலை அடைந்ததுடன்.இதேவேளை SLPS-1 நிலையினையும் அடைந்தார்.

இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளை என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 06.05.2019 இல் 70 வயதில் சுண்டுக்குழியில் இல.308,விதானையார் வீதி உள்ள தனது வீட்டில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"கல்வியில் சிறந்த
....... காலத்தின் விடிவெள்ளி
வாழ்வின் உச்சத்தை
.......அடைந்த செம்மலே
கடமை ஆற்ற
.....சுழன்ற உயிரே
காலம் உள்ளவரை
....... மறக்காத மாமனிதரே "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.