மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வில்லவராஜா சிவலிங்கம்
முன்னாள் உதவி அரசாங்க அதிபர், பட்டணமும் சூழலும்
வயது 888 மார்ச், 1931 – 14 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வில்லவராஜா சிவலிங்கம் அவர்கள் 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வில்லவராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் பாலாம்பிகை தம்பதிகளின்பாசமிகு மருமகனும்,
பாலமகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இரவீந்திரன்(ரவி), விபுலேந்திரன்(பாபு), நிர்மலேந்திரன்(குட்டி), காலஞ்சென்ற குகேந்திரன்(குஞ்சு), சிவேந்திரன்(செல்வன்), குணேந்திரன்(குணா), கிருபாகரி(பிள்ளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரம்யா, விஜிதினி, கோமளகெளரி, உதயகுமாரி, கிஷாந்தினி, சக்திசரவணபவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், தியாகலிங்கம் மற்றும் இராஜராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தர், மனோன்மணி மற்றும் ஸ்ரீஸ்கந்தா, பாலகணேசன், நடேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்மலாதேவி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பத்மாவதி, காலஞ்சென்ற மண்டலேஸ்வரன், செல்வராணி, கெளரி, நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோஜ், அகல்யா, ஆரரன், மாதுமை, ராம், பிரணவன், சிந்துகி, ஷாருகி ஆகியோரின் அன்புப் பேரனும்,
மகிமை அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர் தலைநகரமும்,சைவம் தழைத்தோங்கிய இடமும் பழமை வாய்ந்ததும் பாடல் பெற்றதுமான திருக்கோணேசர நாதர் அருள்பாலிக்கும் திருகோணமலையில் 08/MAR/1931 ஆம் ஆண்டில் வில்லவராஜா மனோன்மணி தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.சிவலிங்கம் அவர்கள் சோதிலிங்கம், தியாகலிங்கம், இராஜராஜேஸ்வரி, ஞானசம்பந்தர், மனோன்மணி, ஸ்ரீஸ்கந்தா மற்றும் பாலகணேசன், நடேசலிங்கம் சகோதரங்களுடன் வளர்ந்து இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், அருணாச்சலம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகள் பாலமகேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து இரவீந்திரன், விபுலேந்திரன், நிர்மலேந்திரன், குகேந்திரன், சிவேந்திரன், குணேந்திரன், கிருபாகரி எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று ரம்யா, விஜிதினி, கோமளகௌரி, உதயகுமாரி, கிஷாந்தினி, சக்திசரவணபவன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து மனோஜ், அகல்யா, ஆரரன், மாதுமை, ராம், பிரணவன், சிந்துகி, ஷாருகி எனும் பேரப்பிள்ளைகளுடனும், மகிமை எனும் பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் திருகோணமலை பட்டணமும் சூழலும் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் அன்புள்ளம் கொண்டு விளங்கி குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார்இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளை, சகோதரங்கள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 14.07.2019 இல் 88 வயதில் திருகோணமலை உள்ள கஸ்கிஸன் வீதியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
வயதில் உயர்ந்து
வாழ்வில் பாதைகாட்டி
நிஜமாய் வாழ்ந்து
நிம்மதி பெற்று
கயமைகள் அற்று
காலத்தில் உயர்ந்து
நெஞ்சில் பதிந்து
நினைவாய் வாழ்கிறீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

