மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வில்லவராசா தியாகலிங்கம்
ஓய்வுபெற்ற விவசாய திணைக்கள முகாமையாளர்- இலங்கை, முன்னாள் சர்வோதய பணிப்பாளர் - வடக்கு கிழக்கு மாகாணம், இலங்கை
வயது 8322 செப்டம்பர், 1935 – 13 ஜூன், 2019
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, Chessington
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வில்லவராசா தியாகலிங்கம் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வில்லவராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், சீதாதேவி அவர்களின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான இராஜவரோதயம் யோகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சங்கவை அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆர்ணா அவர்களின் அன்புப் பேரனும்,
சங்கரி தர்மசுதன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சகானா, அபர்ணா, பாவனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவலிங்கம், காலஞ்சென்ற சோதிலிங்கம், இராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற ஞானசம்பந்தர், காலஞ்சென்ற மனோன்மணி, சிறீஸ்கந்தா, பாலகணேசன், நடேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலமகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பத்மாவதி, காலஞ்சென்ற மண்டலேஸ்வரன், செல்வராணி, கௌரி, நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இலட்சுமிதேவி, சம்பந்தன், காலஞ்சென்றவர்களான சாரதாதேவி, விக்னேஸ்வரன், மகேந்திரன் மற்றும் இராஜயோகினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிவ பூமியான பிரதேசமும்,இலட்சுமி நாராயணன் அருள் பாலிக்கும் அழகிய பிரதேசமும் தமிழர் தலைநகரரும் மூவின மக்களும் வாழும் அழகு நிறைந்த இடமான திருகோணமலையில் 22/SEP/1935 இல் திரு.திருமதி வில்லவராசா மனோன்மணி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.தியாகலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சிவலிங்கம், சோதிலிங்கம், இராஜராஜேஸ்வரி, ஞானசம்பந்தர், மனோன்மணி, சிறீஸ்கந்தா, பாலகணேசன், நடேசலிங்கம் போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி இராஜவரோதயம் யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகள் நிர்மலாதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ராஜீவன் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பண்பாக வளர்த்து சங்கவை என்பவருக்குத் திருமணம் முடித்து வைத்து ஆர்ணா எனும் அழகுப் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இலங்கை விவசாயத் திணைக்கள முகாமையாளராக சேவை செய்ததுடன்,வடகிழக்கு மாகாண சர்வோதய பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,
இவ்வாறு மனைவி, பிள்ளை,பேரப்பிள்ளை, உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 13.06.2019 இல் 83 வயதில் பிரித்தானியாவில் உள்ள Chessington நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
சங்கத் தமிழரின் சிங்க மகன்
பங்கம் அற்ற பக்குவ மனம்
திங்கள் ஒளியை மிஞ்சும் அழகு
சிங்கத் தலையின் சிம்மாசனம் நகரில்
சிங்கார நடை போட்டு வாழ்ந்து
சரித்திரம் படைத்து பிரிந்து சென்றீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

