1ம் ஆண்டு நினைவஞ்சலி

வில்வராஜா தம்பிஐயா
வயது 89, ஓய்வுபெற்ற யாழ்/ கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியர்
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வில்வராசா தம்பிஐயா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஓவ்வொரு கணப் பொழுதும்
துடிக்கின்றோம்!
ஆண்டொன்று ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம் தெரிகிறது தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு மிக அருகில் உள்ள கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் திருநெல்வேலியில் 22/JUL/1930 ஆம் ஆண்டில் திரு.திருமதி தம்பிஐயா அமுதம்மா தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.வில்வராசாஅவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் இரட்ணராசா, இரட்ணராணி, வில்வராணி, யோகராணி எனும் சகோதரருடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன்,திரு.திருமதி நடராஜா, ராஜேஸ்வரி தம்பதிகளின் மகளான கனகாம்பிகை எனும் அழகிய தேவதையைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக விமலினி, கமலினி, விமல்ராஜ் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து பெரியவர்களானதும் ஸ்ரீதரன், மோகன், செல்வி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து தனுஜன், கரன், கிசோன் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் யாழ்/ கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியராக சேவையாற்றி ஓய்வு பெற்ற இவர் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார், உறவினர், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.12.2019 இல் 89 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
தந்தையே எங்கள் தயவின் உச்சமே
விந்தை பல செய்த வீர புருஷரே
உந்தன் அன்பில் நாம் நித்தம் திளைத்தோம்
எந்தன் வாழ்வை அழகுற அமைத்து
எங்கே சென்றீர் எங்குல சாமியே.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

