4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வினாசித்தம்பி குஞ்சிதபாதம்
வயது 549 நவம்பர், 1958 – 22 ஜனவரி, 2013
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- ஓமந்தை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வினாசித்தம்பி குஞ்சிதபாதம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
தப்பு செய்தால் தண்டித்து
தவறு செய்தால் மன்னித்து
தந்தைக்கெல்லாம் முன்னுதாரணமாய்
தரணியில் இருந்தவர் நீங்களே!
அம்மாவுக்கு ஒரு நல்மகனாய்
உடன் பிறப்புகளுக்கு நல்லதோர் வழிகாட்டியாய்
மனைவிக்கு சிறந்த கணவனாய்
பிள்ளைகளுக்கு நல்லதொரு அப்பாவாய்
திகழ்ந்தவர் நீங்களே!
எங்களை பாதுகாப்பாக பார்த்து
நல்லவற்றைக் கற்றுத்தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா!
என்று காண்போமோ அப்பா!!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்பா
அழியாது உங்களோடு நாம் வாழ்ந்த காலங்கள்
அதை நெஞ்சில் எண்ணியே வாழ்ந்திடுவோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், தாய், சகோதர, சகோதரிகள்,
மாமா, மாமி, மைத்துனர், மைத்துனிமார்கள், மருமக்கள்
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

