மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விநாயகமூர்த்தி பாலச்சந்திரன்
வயது 6312 மே, 1955 – 7 மே, 2019
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- Frankfurt Am Main
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt am Main ஐ வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி பாலச்சந்திரன் அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலோஜினி(விஜயா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிரஞ்சன், காருண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகினி(பிரியா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சபாநாதன்(ஜேர்மனி), விக்கினேஸ்வரி(இலங்கை), பங்கயவதனி(ஜேர்மனி), குபேரறதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினிதேவி(கனடா), சாரதாதேவி(இலங்கை), விமலாதேவி(கனடா), காலஞ்சென்ற குமரேசன்(கனடா), குகானந்தன்(ஜேர்மனி), லோகநாதன்(குமார்- ஜேர்மனி), மதுரவதனி(கனடா), சிவகுருநாதன், சக்திவேல், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தராசா, பத்மநாதன், திலகசுந்தரம், ஞானேஸ்வரன், ரஞ்சினிதேவி, உதயகுமாரி, தயாரூபி ஆகியோரின் அன்புச் சகலரும்,
தர்மராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த நயினாதீவு 8ஆம் வட்டாரத்தில்12/May/1955 இல் விநாயகமூர்த்தி மங்கையற்கரசி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக பாலச்சந்திரன் அவர்கள் சபாநாதன், விக்கினேஸ்வரி, பங்கயவதனி, குபேரறதி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன், சுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் விஜயலோஜினி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நிரஞ்சன், காருண்யா ஆகிய பிள்ளைகளை பெற்று பாதுகாத்து வளர்த்து மகிழ்வுற்று வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் அன்புள்ளம் கொண்டவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07.05.2019 இல் 63 வயதில் ஜேர்மனியில் உள்ள Frankfurt am main நகரத்தில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"நயினா தீவின்
....நல்லுள்ளமே
நன்நெறி தவறாது
......வாழ்ந்த உறவே
அன்பு உருவமே
....அழகிய வதனமே
அன்பைப் பிரிந்தோம்
.... அகிலம் துறந்ததால் "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

