மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வினாயகமூர்த்தி பரஞ்சோதி
துறைமுக அதிகாரசபை முன்னாள் மேற்பார்வையாளர்- திருகோணமலை
வயது 8326 ஜூன், 1936 – 21 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி பரஞ்சோதி அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வினாயகமூர்த்தி செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
குமுதா, அருட்செல்வன், சண்முகராசா, சியாமளா, மோகனதாஸ், குணபாலன், மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகசோதி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற அருட்சோதி, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசசிங்கம், கலைச்செல்வி(ராசாத்தி), விஜயகுமார், கலைச்செல்வி(கலா), சாந்திமதி, நீலலோஜினி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயச்சந்திரன், பவானி, மேகரூபன், மலர்விழி, நிரூபினி, கேதீஸ், நிசானி, கேதாரன், அனோப்பிரியன், கம்சனா, மிதுன், கோபிகன், சதீஸ், கஜன், ஓவியா, கபில், கஜித், கரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிருஷ்ணா, விஸ்வா, பவிஷனா, வருணிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2019 வியாழக்கிழமை அன்று இல. 76/10 மத்தியவீதி, திருகோணமலை எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த பருத்தித்துறையில் 26/JUN/1936 இல் திரு.திருமதி வினாயகமூர்த்தி செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனாக பரஞ்சோதி அவர்கள் ஜெகசோதி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, அருட்சோதி, சிவசோதி போன்ற சகோதரங்களுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் இராசமணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து குமுதா, அருட்செல்வன், சண்முகராசா, சியாமளா, மோகனதாஸ், குணபாலன், மஞ்சுளா எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து இராசசிங்கம், கலைச்செல்வி, விஜயகுமார், கலைச்செல்வி, சாந்திமதி, நீலலோஜினி, நந்தகுமார் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து ஜெயச்சந்திரன், பவானி, மேகரூபன், மலர்விழி, நிரூபினி, கேதீஸ், நிசானி, கேதாரன், அனோப்பிரியன், கம்சனா, மிதுன், கோபிகன், சதீஸ், கஜன், ஓவியா, கபில், கஜித், கரன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், கிருஷ்ணா, விஸ்வா, பவிஷனா, வருணிகா எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் திருகோணமலைத் துறைமுக அதிகாரசபை மேற்பார்வையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 21.08.2019 இல் 83 வயதில் திருகோணமலையில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
பருத்தித்துறை மண்ணின் பண்பாளனே
கருமை நிறக் கண்ணனே
வறுமை வந்த போதும் கலங்காது
வாழ்ந்து உயர்ந்த உழைப்பாளியே
எளிமை வாழ்வு வாழ்ந்த எங்கள் சொத்தே
கருணை மனமே கலங்கி அழுகிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

