மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வினாயகசுந்தரம் சிவசாமி
வயது 8617 செப்டம்பர், 1932 – 11 ஜூன், 2019
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- தொண்டைமானாறு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகசுந்தரம் சிவசாமி அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று செல்வச்சந்நிதியான் திருவடியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி உமாதேவி(பரியாரியார்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவாலிங்கம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பங்கையர்செல்வம் அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கலஷ்சுமி, ஜெயலஷ்சுமி, வியிஜலஷ்சுமி(இலங்கை), குமரநாதன்(தேவா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம், மகமாசிஅம்மா(கற்கண்டு) மற்றும் கமலாதேவி(குயிலா- இலங்கை), ஆனந்தவேல்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருமைத்துரை, செல்வதாஸ், கமலாதேவி, சற்குணதேவி, இராமநாதன்துரை(ராமண்ணா / சாந்திபூஸ்), மற்றும் சரஸ்வதிதேவி, ருக்குமணிதேவி, தங்கவேல்ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 5:00 மணியளவில் காட்டுப்புலம் சைவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் மிக அழகு நிறைந்த இடமான வடமராட்சி வடக்கில் வடக்கே பெருங்கடலும் தெற்கே தொண்டமனாறு கடல் நீரேரியும் சூழ்ந்து குளிர்ச்சி தருவதுடன், பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் அருள் பாலிக்கும் இடமான தொண்டமனாற்றில் 17/SEP/1932 ஆம் ஆண்டில் பரியாரியார் சிவசாமி உமாதேவி தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.வினாயகசுந்தரம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அழகும் நிறைந்த இவர் தங்கவேலாயுதம், மகமாசி அம்மா, கமலாதேவி, ஆனந்தவேல் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து அழகிய தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சிவாலிங்கம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மகள் பங்கையர்செல்வம் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து தங்கலஷ்சுமி, ஜெயலஷ்சுமி, வியிஜலஷ்சுமி, குமரநாதன் எனும் அருமையான பிள்ளையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சுந்தரி என அன்புடன் அழைக்கப்படும் இவர் நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், பழைய இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.06.2019 இல் 86 வயதில் பெரிய கடற்கரை தொண்டைமானாற்றில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
”குல விளக்கே எங்கள்
கோவில் சிலையே
குங்கும நிறமே எமது
குல தெய்வமே
பங்க குணமற்ற இனிய
பாச உறவே
எங்கள் தங்கமே நீங்கள்
எங்கே போனீரே”
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

