கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வின்சென்ற் இயூஜின்
ஓவியர்
வயது 5011 ஜனவரி, 1969 – 22 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓவியர் கருணா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), நெஜினா வின்சென்ற் (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,
மரிய கருணாகரி ஜீவகுமார் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
ஜீவகுமார் கிறிஸ்ரோப்பர் அவர்களின் அன்பு மைத்துனரும்,
பிரியா - குமணா, சிந்தியா - நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரு. திருமதி மரியநாயகம்(ஓவியர்), காலஞ்சென்ற திரு. திருமதி செலஸ்ரின், காலஞ்சென்ற திரேசா – கிறிஸ்ரோப்பர் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
பச்சைப்பசேலென நெல் வயலும், உருளைக்கிழங்கு, மிளகாய், புகையிலைச் செடிகளையும் சூழ்ந்த அழகுதரும் நகராய் காட்சிதரும் கரவெட்டி என்னும் ஊரில் வின்சென்ட் ரெஜினா தம்பதிகளுக்கு அழகு மகனா இயூஜின் அவனியிலே வந்துதித்தார்.
ஆரம்பக் கல்வியை திரு இருதயக் கல்லூரியில் கற்றார். இவருடைய தாய்மாமன் மரியநாயகம் ஈழத்தில் புகழ்பூத்த ஓவியர் என்பதாலும் தாயார் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர் என்பதாலும் இவர் சிறுவயதிலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர்.
முழுக் கதையையும் வாசிக்க
வளர்ந்து பெரியவனான பின் முறையாக ஓவியம் கற்றுக்கொள்ள ஓவியர் மாற்குவின் மாணவனாகி சிறந்த ஓவியராக உலகிற்கு அறிமுகமானார்.
கருணா எனும் புனைபெயருடன் பல்வேறுபட்ட ஓவியங்கள் திண்ணை, உலகத் தமிழோசை எனும் இதழ்களில் தொடர்சியாக வரைந்ததுடன்,ஏராளமான தமிழ் புத்தகங்களுக்கு அட்டைப்படங்களை வடிவமைத்தார்.
இதேவேளை பத்திரிகை, விளம்பர வடிவமைப்பில் கைதேர்ந்தவராக உள்ளதுடன், சிறந்த ஒளிப்படக் கலைஞராகவும் விளங்கினார்.
மாறிவரும் உலகில் டிஜிட்டல் மாற்றத்தை எதிர்கொண்டு டிஜிட்டல் வடிவமைப்பிலும் வெற்றி கண்டார். அத்துடன் இவரின் ஓவியக் கண்காட்சி 2017 தை 14,15 ஆம் திகதியில் கனடாவில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாறு ஓவியமும் உயிருமாய் வாழ்ந்த இவர் 22-2-2019 கனடா ரொரன்ரோவில் இறையடி சேர்ந்தார்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

