கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசாகசர்மா சாரங்கசர்மா
வயது 1828 ஜனவரி, 2000 – 20 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- Herning
- வாழ்ந்த இடம்
- Herning
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகடென்மார்க் Herning ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசாகசர்மா சாரங்கசர்மா அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தின் டென்மார்க் ஒருங்கிணைப்பாளர் திருமதி. அபிராமி விசாகசர்மா அவர்களின் இளைய புதல்வன் விசாகசர்மா சாரங்கசர்மா அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்துவிட்டார் என்பதனை அறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம்.
செல்வன் சாரங்கசர்மா அவர்களை இழந்து துயரத்தில் தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவரின் ஆத்மசாந்திக்காகவும், அன்னாரின் பிரிவாற் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இப் பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையைக் கொடுக்கவேண்டியும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2018 வியாழக்கிழமை அன்று மு.ப. 11:00 மணியிலிருந்து பி.ப 01:30 மணிவரை Industrivej Syd 1B, 7400 Herning, Denmark என்னும் இடத்தில் நடைபெற இருப்பதால் டென்மார்க் நாட்டு தமிழக்கலை ஆசிரியர்கள் அனைவரையும் கலந்துகொண்டு இறுதி வணக்கத்தைச் செலுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
— நாகராஜா விஜயகுமார்(தேர்வுப்பொறுப்பாளர்- அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகம்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

