ஆறுதல்

நன்றி நவிலல்

விஸ்வலிங்கம் அன்னலக்சுமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஸ்வலிங்கம் அன்னலக்சுமி

வயது 844 மே, 1935 – 24 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
குப்பிளான், Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "

எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

எப்போதும் இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்த அன்னலக்சுமி அவர்கள் வாழ்க்கை வரலாறு இதோ....

இயற்கை எழில் மிகுந்த இடமும் தமிழர் பண்பாடு போற்றப்படும் யாழ்ப்பாணத்தின் கல்வியங்காட்டில் 04/MAY/1935 இல் திரு.திருமதி சின்னதுரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளாய் அன்னலக்சுமி அவர்கள் தங்கரத்தினம்,கனகரத்தினம்,பரிமளம்,இராஜரத்தினம்,நாகேந்திரம்,செல்வம் எனும் சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி மாரிமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனான விஸ்வலிங்கம் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக லீலா, சிவசோதி, ரதிகுமாரி, பத்மராணி, புஸ்பராணி, செல்வநாயகம், நித்தியானந்தன், நித்தியவேணி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தனர். பிள்ளைகள் வளர்ந்து இளமையானதும் இரத்தினசிங்கம், சிவபாதசுந்தரம், சயந்தினி, கண்ணகுமார், மகேந்திரராஜா, டயானி, முக்கேஷ் போன்றோரை திருமணம் முடித்து வைத்து கிருபாகரன், தர்மினி, பார்த்தீபன், சிவானி, கலைவதனி, சொரூபன், சிந்து, ராகுலன், இந்துஷா, றதீஸ், லதீபன், நிரோஜன், நிஷா, நிஷன், நிதுஷா, ஜேய்ஷன், கரிஷன், கேயிஷன், பிரித்திகா, கானுஜன், பவிஜன், ரவீனா போன்ற பேரப்பிள்ளைகளுடனும், கீரன், ரூபன், கிஷோன், ஹரிஷன், கனிஷா, அஷான், ஈத்தன், றொஷான், கிஷான், ருஷா, ஜெனிஷா, ஜெஷான், சரண், சாத்விக், மத்தியாஷ், மல்கம் போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 24.09.2019 இல் 84 வயதில் கனடாவில் உள்ள MOntreal நகரில் இயற்கை மரணம் அடைந்தார்.

அன்னையே ஆருயிர் உள்ளமே
எண்ணமே எப்போதும் எம் மீது
சின்னதாய் சிதறும் சிரிப்புடன்
வண்ணமாய் வாழ்த்தினாய் வனப்புடன்
கண்ணே கருணையே
காணத் துடிக்குது உள்ளம்

பிற அறிவித்தல்கள்

  1. 26 செப்டம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.