நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசுவலிங்கம் கனகசபாபதி
ஓய்வுபெற்றஆசிரியர்- தாவளை இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, டிக்கோயா ஹைலண்ட்ஸ் கல்லூரி, ஹற்றன் தாவடி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை
வயது 9015 மே, 1929 – 1 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த தாவடியில் 15/MAY/1929 ஆம் ஆண்டில் திரு.திருமதி விசுவலிங்கம் திருப்பதிதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.கனகசபாபதி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் பாக்கியம், விசாலாட்சி, நாகம்மா, செல்லம்மா, கனகம்மா, சரஸ்வதி போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி விசுவலிங்கம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகள் இணுவில் மத்திய கல்லூரி ஆசிரியையான தவமணி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து இரகுபதி, சத்தியசோதி, பிரபாகர் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிவனேஸ்வரி,ஊர்மிளா என்பவர்களைத் திருமணம் முடித்துவைத்து குமரன், மஞ்சுளா, இலக்கியா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் தாவளை, தாவடி, ஹற்றன் இந்து தமிழ்க்கலைவன் பாடசாலை, டிக்கோயா ஹைலண்ட்ஸ் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் அன்புள்ளம் கொண்டு உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 01.09.2019 இல் 90 வயதில் கோண்டாவிலில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
முழுக் கதையையும் வாசிக்க
கல்வியில் சிறந்த ஆசானே
கடமையை கண்ணாக நினைந்து
கற்பித்த செம்மலே
ஒளியாக வீசி குருவாக விளங்கி
அருள் வார்த்தை பொழிந்த
ஆண்டவன் கொடையே
அன்பைப் பிரிந்து
அகிலம் துறந்தது ஏனோ
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

