நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசுவநாதி செல்லப்பா
இளைப்பாறிய அதிபர்- இருபாலை சி.சி. தமிழ் கலவன் பாடசாலை
வயது 8913 ஜூலை, 1929 – 17 ஜூன், 2019
- பிறந்த இடம்
- மறவன்புலோ
- வாழ்ந்த இடம்
- இருபாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "
அன்னாரின் இறப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களுக்கும், எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் வந்தும், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட சாவகச்சேரி மறவன்புலோவில் 13/JUL/1929 ஆம் ஆண்டில் திரு.திருமதி விசுவநாதி சிதம்பரம் தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.செல்லப்பா அவர்கள் வள்ளியம்மை, மாரிமுத்து போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அழகு நிறைந்த இவர் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளான புஸ்பரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து சுகிர்தமலர், சுகிர்தராசா, சுகிர்தரத்தினம், திருக்குமரன், சேந்தா, செந்தூரன் எனும் அருமையான பிள்ளையைப் பெற்று வளர்த்து சிவபாலசுந்தரம், ரஜினிதேவி, ஜெயசீலி, ஜெயச்சந்திரன், தேனுகா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து ரசீக்கா, அஸ்வின், அருஷேன், காயத்ரி, சம்சனா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் செல்லப்பா மாஸ்டர் என அழைக்கப்படும் இவர் ஆசிரிய சேவை சிறப்பாக ஆற்றியதுடன் இருபாலை சி.சி தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார். அத்துடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் வள்ளலும் ஆவார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 17.06.2019 இல் 89 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கல்வியில் சிறந்த கருணை ஒளியே
வெல்க தமிழாய் வாழ்ந்த செம்மல்
அல்லும் பகலும் சேவை மனமாய்
வல்லமை தந்தாய் வாழ்க்கை பாதையில்
செல்லும் வழியை சிறப்பாக உணர்த்தி
சொல்லாய் நிலைத்தாய் சொந்தங்கள் மனங்களில்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

