நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசுவலிங்கம் கந்தசாமி
B.Com, ஓய்வுபெற்ற சங்கானை MBCS(Union) General Manager
வயது 9127 ஏப்ரல், 1928 – 25 ஜூன், 2019
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- Woodbridge
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியையில் உதவி புரிந்த அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் பண்டத்தரிப்பில் புகழ் பூத்த சீமான் திரு.விசுவலிங்கம் அவர்தம் பாரியார் திருமதி செல்லாச்சி அவர்களின் அருமைப் புத்திரனாக 27/APR/1928 ஆம் ஆண்டில் திரு.கந்தசாமி அவர்கள் தங்கம்மா எனும் அன்புச் சகோதரியுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், திரு.திருமதி சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகள் குலமணி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக விமலன், தயாபரி, தயாவாணி, வைகுந்தன் போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று செல்வராணி, மகேசன், சாந்தசிவம், ஜெயகௌரி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து தாரணி, கைலாஷ், சயந்தன், சாரங்கன், திவ்யன், விதுரன், விபீசன், விவேகன், கீர்த்தன், அஞ்ஜனி போன்ற பேரப்பிள்ளைகளும், கவின், யாத்ரன், அம்சவி, நவீன், லஹரி எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் தொண்டர் என அனைவராலும் பாசமாக அழைக்கப்படும் இவர் சங்கானை MBCS(UNION) General manager ஆக விளங்கி ஓய்வு நிலை அடைந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 25.06.2019 இல் 91 வயதில் கனடாவில் உள்ள Woodbridge நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"பண்டத்தரிப்பு மண்ணின்
......பாதை காட்டியே
வண்டல் மண் போல்
......நன்மை விரும்பியே
சுட்டு விரல்
.....நீளும் திசையில்
நின்றோம் உம்முடன்
.....பிரிந்தீரே எமைவிட்டு
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

