ஆறுதல்

மரண அறிவித்தல்

விஸ்வலிங்கம் மகாலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஸ்வலிங்கம் மகாலிங்கம்

வயது 8229 மே, 1936 – 7 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
கட்டுவன்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு கோகுல வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கனகலிங்கம் (மூர்த்தி- பிரான்ஸ்), கணேஸலிங்கம்(கனேஸ்- பிரான்ஸ்), டெசியராணி(கனடா), ஜமுனாராணி(டென்மார்க்), ராஜாதேசிங்(கனடா), காலஞ்சென்ற செல்வராணி, விஜியராணி(இலங்கை), சசிக்குமார்(இலங்கை), கோகிலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மரகதலிங்கம், கனகாம்பிகை, காலஞ்சென்றவர்களான புவனேசமனி, தர்மகுலசிங்கம் மற்றும் தனபாலசிங்கம்(கனடா), இராஜேஸ்வரி, துளசி, மங்கையற்கரசி, பஞ்சலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பூலோகம், காலஞ்சென்ற சோதிலிங்கம், பரமேஸ்வரி, அருணகிரி, சந்திரபாலன், தனபாலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயபாலன், சிவபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கல்பனா(பிரான்ஸ்), நந்தனி(பிரான்ஸ்), பிறேமன்(கனடா), புறுனோ(டென்மார்க்), துர்க்கா(கனடா), சிவகாந்தன்(ஆசிரியர்- இலங்கை), காவேரி(இலங்கை), பகீரதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கீர்த்தனா, சாரங்கி, தரனியா, கீர்த்தன், லக்‌ஷன், திலக்‌ஷா, ஜெசிக்கா, ஜெசிந்தா, தர்ஷன், யுனத்தான், நிக்குலாய், பிரவின், பிரஜின், அஸ்வின், அக்‌ஷன், அனகின், தேவவினோதன், அபராயுதன், கம்சன், தட்சாயினி, லக்‌ஷனி, கரிகாலன், சாரா, லூக்காஸ், சியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கலைவானி மக்கள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் வாழைத்தோட்டம் நெல்வயல்கள், மிளகாய்த்தோட்டம், மரக்கறித் தோட்டங்கள் என செழிப்பு மிகுந்த கட்டுவனில் 29-05-1936 இல் விஸ்வலிங்கம் சின்னம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் மகாலிங்கம் அவர்கள் மரகதலிங்கம், கனகாம்பிகை, புவனேசமணி, தர்மகுலசிங்கம், தனபாலசிங்கம், இராஜேஸ்வரி, துளசி, மங்கையற்கரசி, பஞ்சலிங்கம் ஆகிய சகோதரர்களுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

மேலும் ஆளுமையும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் நல்லதம்பி தங்கச்சியம்மா தம்பதிகளின் அழகு மகள் நாகேஸ்வரி அவர்களை திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து கனகலிங்கம், கணேஸலிங்கம், டெசியராணி, ஜமுனாராணி, ராஜாதேசிங், செல்வராணி, விஜியராணி, சசிக்குமார், கோகிலா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர் உதவிடும் வள்ளலாக விளங்கினார். பாசமாக நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடி அவர்கள் நலன்களில் கவனம் செலுத்தும் மனம் கொண்ட ஒருவராக இருந்தார்.

இவ்வாறு மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07-04-2019 இல் 82 வயதில் கோண்டாவிலில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

"அன்பின் உயிரே
ஆருயிர் உள்ளமே
அலை கடல் போல்
மேதிச் சென்று
சந்தன மேனி
சங்கமம் ஆகி
சரித்திரம் படைத்தது"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.