1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வித்யா பிரகாஷ்
வயது 3412 டிசம்பர், 1984 – 23 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- சுதுமலை, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வித்யா பிரகாஷ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எந்தன் இன்னுயிர்த் துணைவியே!!
முதலில் எனக்குத் துணைவியானாய்
பிறகு என் தோழியானாய்
ஒவ்வொரு வினாடியும்
என் நாடியோடு நாடியாய் கலந்திட்டவளே!
நிறைவாக மணவாழ்வில்
நிறைவுடன் வாழ்ந்தோம்
பெற்றோரும் உற்றோரும்
களிப்புற கண்டோம்!
அறமோடு அன்பாக பணிகள்
ஒரு மனதாய் ஆற்றினோம்
அன்பான இல்வாழ்வில்
இரு பண்பான கண்மணிகளை
பெற்றெடுத்தோம்...
ஆருயிர் அம்மாவே.......!
பார்க்கும் பொருளெல்லாம் உங்கள் முகம்!
போகுமிடமெல்லாம் உங்கள் நினைவு!
கேட்கும் குரலெல்லாம் உங்கள் குரல்!
வருடங்கள் எத்தனை சென்றாலும்
மாறுமோ இன் நிலமை..?
பேச்சினிலே நீங்கள்!
சுவாசிக்கும் மூச்சினிலும் நீங்கள்!
எதிலுமே நீங்கள்! எல்லாமே நீங்கள்!!!!!
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
எங்கள் அருமை மகளே!!!
காலை கண்விழித்த நொடி முதல் உன் ஞாபகங்கள்
உன் நினைவுகள் எங்கள் மனதில்
அழியா சுவடுகளாய் பதிந்துள்ளன
நீ இல்லாத வாழ்க்கை, நரகமாய் உள்ளது மகளே!!
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது..
இறைவன் அவனுக்கு பிடித்தவர்களை சீக்கிரமே
தன்னுடனேயே கூப்பிட்டு விடுவானாம்
இத்தனை நல்ல குணம் படைத்த உன்னையும் அவன்
தன்னிடமே அழைத்து விட்டான்..
என்றும் உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
அனைவரோடும் பாசமாகி பழகுபவரும், பல எதிர்கால கனவுகளோடு வாழ்க்கையை வாழ்ந்து வந்தவருமான வித்யா பிரகாஷ் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
யாழ்ப்பாணத்தில் அதிகம் படித்த மக்களைக் கொண்டதும், நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும் மிகுந்த அழகிய அச்சுவேலியில் 12/DEC/1984 இல் விக்கினேஸ்வரன் ரட்ணா தம்பதிகளின் அன்பு கொண்ட மகளாக வித்யா அவர்கள் பிறந்தார். வினேஷ் எனும் தனது சகோதரனோடு ஓடி ஆடி விளையாடி குறும்புகள் செய்து வளர்ந்து வந்த இவர் தனது பள்ளிப் படிப்பில் சிறந்த மாணவியாக விளங்கினார்.
முழுக் கதையையும் வாசிக்க
தனது பாசமிகு குடும்பத்துடன் 1990களில் கனடாவிற்கு குடிபெயர்ந்த இவர் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்று, எதிர்கால தலைமுறையினரை உருவாக்கும் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
தனது கணவராக மகேந்திரன் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனான பிரகாஷ் என்பவரைத் திருமணம் செய்து இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்து வந்த இவர், வர்சனா, சாய்நேகா என்ற இரு செல்வங்களை பெற்று பாசத்துடன் வளர்த்து வந்தார். அனைவரோடும் அன்பாக பழகுபவரான இவர், குடும்பத்தின் ஆணிவேராக விளங்கி, ஒரு நல்ல மனைவியாக, பிள்ளைகளுக்கு ஒரு முன்னுதாரணம் மிக்க தாயாக விளங்கினார்.
தனது இரு பிள்ளைகளே தனது இரு கண்களென வாழ்ந்து வந்த இவர், அவர்களின் எதிர்காலத்தை இருட்டாக்கி 23.09.2019 இல் தனது 34 வயதில் திடீரென காலமானார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

