ஆறுதல்

மரண அறிவித்தல்

புவிராஜரட்ணம் விவேகானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புவிராஜரட்ணம் விவேகானந்தன்

இளைப்பாறிய இலங்கை வங்கி முகாமையாளர்

வயது 702 ஆகஸ்ட், 1948 – 9 மே, 2019

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
புத்தூர், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டி பொன்னா-வில்லாவைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவிராஜரட்ணம் விவேகானந்தன் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சேதுகாவலர் புவிராஜரட்ணம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராஜா மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பார்த்திபன்(அவுஸ்திரேலியா), துஷாரா(பிரித்தானியா), சாருஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பகீரதி(அவுஸ்திரேலியா), உமாகுமரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகேஸ்வரி, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், கதிர்காமநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான யோகானந்தன், சுகுமார் மற்றும் பரமேஸ்வரி(சுவிஸ்), நந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), மோகனராஜ்(நியுசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவானந்தன், விமலாராணி, புவனேஸ்வரி(கனடா), சிவயோகராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிறேமளா, கமலநாதன்(சுவிஸ்), நளினி(ஐக்கிய அமெரிக்கா), வசந்தி(நியுசிலாந்து), பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), ரஞ்சினிதேவி, ராகினி, நந்தினி(பிரான்ஸ்), நகுலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாய்சரண், பிரதீஷ், மித்திரன், கிருஷ்ணவி, கனிஷ்கா, யஷ்னிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-05-2019 சனிக்கிழமை மற்றும் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 12:30 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 13-05-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,நெல்வயல்கள், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டி பொன்னாவில்லாவில் 02/Aug/1948 இல் சேதுகாவலர் புவிராஜரட்ணம் சரஸ்வதி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக விவேகானந்தன் அவர்கள் யோகேஸ்வரி, திருஞானசம்பந்தர், கதிர்காமநாதன், யோகானந்தன், குமார், பரமேஸ்வரி, நந்தகுமார், மோகனராஜ் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன், துரைராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் ராஜராஜேஸ்வரி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து பார்த்திபன், துஷாரா, சாருஜா ஆகிய பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன், பகீரதி ,உமாகுமாரன் என்பவர்களை திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன் சாய்சரண், பிரதீஷ், மித்திரன், கிருஷ்ணவி, கனிஷ்கா, யஷ்னிகா போன்ற பேரப்பிள்ளைகளோடு மகிழ்வுற்று வாழ்ந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் நன்கு படித்து இலங்கை வங்கி முகாமையாளராக கடமை ஆற்றியதுன் ஓய்வு நிலை அடைந்ததுடன் இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 09.05.2019 இல் 70 வயதில் கொழும்பில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"உடுப்பிட்டி தந்த
....உத்தம உறவே
உழைத்து வாழ்ந்த
......எங்கள் உயிரே
அன்பு உறவே
....பரிவு உள்ளமே
அகிலம் துறந்தீர்
.... பண்பு உறவே"

பிற அறிவித்தல்கள்

  1. 7 ஜூன், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.