மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைரானந்தன் வேலுப்பிள்ளை
கடல்கடந்த தொலைத்தொடர்பு சேவை OTS யில் கடமையாற்றிவர்
வயது 812 செப்டம்பர், 1937 – 8 ஜூன், 2019
- பிறந்த இடம்
- ஏழாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை, மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும், தற்போது அவுஸ்திரேலியா Dandenong Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வைரானந்தன் அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவஞானசுந்தரம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு துணைவரும்,
குமாரரூபன்(Melbourne), ரூபிகா(Melbourne), பிரியங்கன்(Melbourne) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி ராமலிங்கம், பேரின்பநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயா, மனோஜ், வர்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(Canada Edmonton) அவர்களின் அன்பு மைத்துனரும்,
திஷான், திவேகா, ஷியோன், ஷானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,படித்த மக்களை கொண்டதும், பயன்தரு மரங்கள், நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த ஏழாலை மேற்கில் 02/SEP/1937 ஆம் ஆண்டில் திரு.திருமதி வேலுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.வைரானந்தன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நாகேஸ்வரி ராமலிங்கம், பேரின்பநாதன் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி சிவஞானசுந்தரம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகள் சரோஜினிதேவி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து குமாரரூபன், ரூபிகா, பிரியங்கன் போன்ற அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்ததுடன் ஜெயா, மனோஜ், வர்ஷா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து திஷான், திவேகா, ஷியோன், ஷானியா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் கடல்கடந்த தொலைத்தொடர்பு சேவை OTS யில் கடமையாற்றியதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.06.2019 இல் 81 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
எங்கள் உறவே
......எளிமைக் குணமே
தங்க உள்ளமே
......தலைமைப் பண்பே
விந்தை மனிதரே
........வீரப் புதல்வனே
சந்ததி பெருக்கி
......சரித்திரம் ஆனீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

