மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வின்ஸ்ரன் செபஸ்ரியன்
வயது 7811 நவம்பர், 1940 – 20 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட வின்ஸ்ரன் செபஸ்ரியன் அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவல் செபஸ்ரியன்(றொட்டர்), மேரி யோசப்பின்(செல்வம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோசப் கிறகரி(பாக்கியமுத்து), லூட்ஸ் அன்னரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்ரனற் றஞ்சனி அவர்களின் பாசமிகு கணவரும்,
தானியா ஜீன்(ஒஸ்லோ), எட்கார் அகிலன்(ஒஸ்லோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றிச்சேட்(கருணா- ஒஸ்லோ), துஷாந்தி(ஒஸ்லோ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜோர்ஜ் கிறிஸ்ரி(ஜேர்மனி), ஜெனற் யூலியானா(டென்மார்க்), யூஜின் ஆனந்தகுமார்(பேர்கன்), மைக்கல் அஞ்சலோ(சந்திரகுமார்- ஒஸ்லோ), ஜோண்(சூரியகுமார்- பேர்கன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Karin(ஜேர்மனி), அலோசியஸ்(டென்மார்க்), Gunn Karin(பேர்கன்), Bente(ஒஸ்லோ), Annunciata(பேபி-பேர்கன்), இம்மாகுலேற் (ராஜினி- கனடா), யோசப்பின்(சாந்தினி- இலங்கை), மரினா(கமலினி- ஒஸ்லோ), அன்ரன்(ஒஸ்லோ), டன்ரன்(குட்டி- ஒஸ்லோ), குயின்ரன்(ராஜு- ஒஸ்லோ), ஜெயவீரன்(ஜெயா- ஒஸ்லோ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வனசா கவிதா, மார்க்கஸ் ஆதவன், ஆதிரியான் தீரன், செலீனா அதிரா, எமிலி தென்றல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும், எழுச்சி கொண்டதும் எதற்கும் அஞ்சாத மனமும் கொண்ட மக்களும் கடல் உணவு பொருட்கள் நிறைந்து காணப்படும் குருநகரில் 11/Nov/1940 இல் மனுவல் செபஸ்ரியன் மேரி யோசப்பின் தம்பதிகளின் அன்பு மகனாக திரு.வின்ஸ்ரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ஜோர்ஜ் கிறிஸ்ரி, ஜெனற் யூலியானா, யூஜின் ஆனந்தகுமார், மைக்கல் அஞ்சலோ, ஜோண் எனும் உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், யோசப் கிறகரி லூட்ஸ் அன்னரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகள் அன்ரனற் றஞ்சனி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தானியா ஜீன், எட்கார் அகிலன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து றிச்சேட், துஷாந்தி என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து வனசா கவிதா, மார்க்கஸ் ஆதவன், ஆதிரியான் தீரன், செலீனா அதிரா, எமிலி தென்றல் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நோர்வேயில் கால்பதித்த மூத்த தமிழரும்,தமிழ் மக்களின் உரிமைகளிற்காக உதவிய உத்தமரும், தமிழர் கத்தோலிக்க நலன்புரி மன்றத்தில்(CATWAS) தலைவராக ஆரம்ப காலத்தில் பணி புரிந்தார். அதன் இப்போதைய உச்ச வளர்ச்சிக்கு இவரின் பங்கு மிக முக்கியமாக விளங்குவதுடன், அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.07.2019 இல் 78 வயதில் நோர்வேயில் உள்ள OSLO நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
முத்துப் பல்லே
முத்தமிழ் வித்தே
எத்தனை அன்பு
உம்மில் கண்டோம்
அத்தனை பாசமும்
ஆண்டவன் குணமே
வித்துடல் ஆனீர்
விழி நீர் சொரிய
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

