மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யமுனா புண்ணியசீலன்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 635 அக்டோபர், 1955 – 31 மே, 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட யமுனா புண்ணியசீலன் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலாயுதர் கனகநாயகம்(ஓய்வுபெற்ற நடேஸ்வரா கல்லூரி அதிபர்) நாகபூசணி(ஓய்வுபெற்ற நடேஸ்வரா கல்லூரி ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும்,
சுப்பிரமணியம் புண்ணியசீலன்(ஓய்வுபெற்ற யூனியன் கல்லூரி அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கேதார்ணி(இந்தியா), நர்த்தனி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தா(லண்டன்), கயேந்திரா(லண்டன்), குகேந்திரா(லண்டன்), மகேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன்(லண்டன்), சிவலோகநாயகி(லண்டன்), பவானி(லண்டன்), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆத்மன்(இந்தியா) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில்(கோண்டாவில் Bus Depot க்கு அருகாமையில்) நடைபெற்று பின்னர் கோண்டாவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,படித்த மக்களை கொண்டதும், மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த அளவெட்டியில் 05/Oct/1955 ஆம் ஆண்டில் அதிபர் வேலாயுதர் கனகநாயகம், ஆசிரியை நாகபூசணி தம்பதிகளின் அன்பு மகளாக யமுனா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் அறிவும் நிறைந்த இவர் ஜெயந்தா, கயேந்திரா, குகேந்திரா, மகேந்திரா போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும்,அறிவு நிறைந்த ஆண் மகனான யாழ்/யூனியன் கல்லூரி அதிபரான சுப்பிரமணியம் புண்ணியசீலன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து கேதார்ணி, நர்த்தனி போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் ஆத்மன் எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இலங்கையில் ஆசிரியர் சேவை செய்ததுடன் ஓய்வு நிலையும் அடைந்தார். இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளை என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 31.05.2019 இல் 63 வயதில் இந்தியாவில் உள்ள சென்னை நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அளவெட்டி மண்ணின்
.......அறிவுக் கடலே
அன்பின் மொழியே
.......அற்புத பிறவியே
ஆயிரம் உறவுகளில்
....... முதல்நிலை உயிர்
ஆண்டவன் அடியில்
.........சரன் புகுந்தீரே"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

