மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகராஜா ஈஸ்வரி
வயது 535 நவம்பர், 1965 – 5 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ், நாவலடி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா ஈஸ்வரி அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சித்திரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி(வள்ளியம்மை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தினி, யதுசா, யாதவன், ஜெனார்த்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரதீப்குமார், நதியா, அமலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, மலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யஸ்வின், கிருஷா, கிருஷ்வின், ஜென்சிகா, ஜெஸ்லினா, செர்லினா, பிரதிஜென் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் நெல்வயல்களும், மிளகாய் செடிகளும் வெங்காய வயல்களும், மரக்கறித் தோட்டங்களும் நிறைந்துள்ள உடுப்பிட்டியில் 05-11-1965 இல் சின்னத்துரை சித்திரம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக ஈஸ்வரி அவதரித்தார்.
அன்பும் அறிவும் நிறைந்த இவர் சின்னத்துரை மலர் போன்ற உடன் பிறப்புகளுடன் கூடி குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அருமை மகன் யோகராஜா என்பவரைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து ஜெயந்தினி, யதுசா, யாதவன், ஜெனார்த்தன் போன்ற அருமைப் பிள்ளைகளை பெற்று வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் அன்பு நிறைந்தவரும் மிகப் பொறுமை சாலியாகவும் வாழ்ந்து குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவி செய்வதை தனது வாழ்வில் அங்கமாக கொண்டவர்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 05-04-2019 இல் 53 வயதில் சுவிஸ்ஸில் இயற்கை மரணம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பு அம்மா ......
அறிவுச் சிகரமே
இனிமை மொழி......
இன்பமாய் பேசி
பாசமாய் வளர்த்து .....
பண்பை ஊட்டி
ஏற்றம் காட்டி......
ஏங்கவிட்டு சென்றீரே""
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

