மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகராசா செழியன்
வயது 453 அக்டோபர், 1973 – 5 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- Essen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா செழியன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோகராசா(முகாமையாளர் BOC), சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
முத்துக்குமாரு மனோரஞ்சிதம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரபலதா(லதா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
செர்லின், செரமியா, லவினன், லதுசன், லதுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவானி(பிரான்ஸ்), செந்தூரன், சேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன்(நோர்வே), பிரபஈசன், பிரதீபா, பிரதர்சா(பிரான்ஸ்), பிரதர்சினி, பிரபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், தென்மராட்சியின் முக்கிய நகரங்களில் ஒன்றும் தெங்குத்தோட்டம், வயல் நிலங்கள், பழமரங்கள், மரக்கறி தோட்டம் என செழிப்பு மிகு இடமான கொடிகாமத்தில் 03-10-1973 இல் இலங்கை வங்கி முகாமையாளராகிய யோகராசா சரஸ்வதி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் செழியன் அவர்கள் பவானி, செந்தூரன், சேந்தன் ஆகிய சகோதரர்களுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
மேலும் ஆளுமையும் அறிவும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் முத்துக்குமாரு மனோரஞ்சிதம் தம்பதிகளின் அழகுப் பெண்ணாண பிரபலதா அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து செர்லின், செரமியா, லவினன், லதுசன், லதுசியா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் நன்கு அறிவு நிறைந்தவராகவும் வாழ்வில் நற் பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவர், இதேவேளை இவரைச் சூழ்ந்து எப்போதும் நண்பர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும், ஏனெனில் நகைச்சுவையாக உரையாடுவதில் திறமையானவராக திகழ்ந்தார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05-04-2019 இல் 45 வயதில் ஜேர்மனியில் உள்ள Essen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"கொடிகாமம் தந்த.....
குல விளக்கேபாச உறவே.....
பலபேரின் நண்பனேகானல் நீராய்......
கலைந்தது ஏனோகரம் கூப்பித் தொழுகிறோம்.....
கண்ணில் நீருடன் "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

