நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகேஸ்வரி தர்மலிங்கம்
வயது 777 ஏப்ரல், 1942 – 15 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் இருபாலையில் 07/APR/1942 இல் திரு.திருமதி வேலாயுதபிள்ளை குருஅம்மா தம்பதிகளின் அருமை மகளாய் யோகேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பஞ்சரத்தினம், சண்முகராஜா, திருநாவுக்கரசு, சிவகுருநாதன், உருத்திரலிங்கம், ஆனந்தீஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி குருசாமி தம்பதிகளின் அன்பு மகன் தர்மலிங்கம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக காண்டீபன் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பாதுகாத்து வளர்த்து கோமதி என்பவரை திருமணம் முடித்து வைத்து தேயோ எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் பிரான்ஸ் சென்று வாழ்ந்த இவர் . எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளை, பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 15.08.2019 இல் 77 வயதில் மானிப்பாயில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
இருபாலையில் உதிர்த்து இடர்களை போக்கி
வரும் எம் வட்ட நிலவே
பெரு விருட்சமாகி பெயர் நாட்டி
கருவினில் வளர்த்து காத்தருளிய
அரு மருந்தே எம் அன்னையே
விழியினில் நீர் வழிய தவிக்கிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

