Aruthal

மரண அறிவித்தல்

Photo of Aloysious Maryprakseeda

In loving memory of

Aloysious Maryprakseeda

Age 72March 29, 1945 – June 1, 2017

Born in
Naranthanai
Lived in
Kili Skanthapuram, Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா அண்ணாநகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அலோஷியஸ் மேரிபிறக்சீடா அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி போல் சவிராசி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியோகு அந்தோனி சவினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அலோஷியஸ்(இளைப்பாறிய அதிபர்) (ஆசிரியர் - ஊர்காவற்துறை றோமன் கத்தோலிக்க ஆண்கள் ஆரம்ப பாடசாலை, அதிபர் - சின்னமடு தமிழ் பாடசாலை, அதிபர் - ஸ்கந்தபுரம் இரண்டாம் பாடசாலை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற றூபின் மேரி கிறேசியா, நொயலின் சாந்தினி காமலிற்றா(சுவிஸ்), எட்வின் நிவில் தேவராஜ்(சுவிஸ்), றோஸ்மேரி அன்ரனிற்றா(ஆசிரியை- வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயம்), யூட் மரிய அன்ரன்(பிரான்ஸ்), லூட்ஸ் றஞ்சினி பப்ரிஸ்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கனியூட் வலன்ரைன், நிமால் மேரிடெனி(இளைப்பாறிய ஆசிரியை- காலி அல்மிரன் முஸ்லீம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெராட் ஜெஸ்மன்(சுவிஸ்), டல்றீன் ஏற்றியன்ஸ்(சுவிஸ்), சந்திரபாஸ்(இத்தாலி), யாழினி(இலங்கை), கஜவதனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரா வலன்ரைன், சித்தீக்(இளைப்பாறிய ஆசிரியர்- காலி அல்மிரன் முஸ்லீம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரிவின்சன், ஸ்ரெவீனா, டார்வின், கார்த்திகா, லஷ்மிகரன், எமில்ரன், எடின்சன், கரோலின், அலெக்ஸி, சோபி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-06-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 11:30 மணியளவில் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 13,
அண்ணாநகர் பிரதானவீதி,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.