நினைவஞ்சலி

In loving memory of
Amalathas Prince Pushpakaran
Age 28July 6, 1982 – October 20, 2010
- Born in
- Batticoloa
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பை பிறப்பிடமாகவும், ஜோ்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமலதாஸ் பிறின்ஸ் புஸ்பாகரன் அவர்களின் 3ம் மாத நினைவஞ்சலி.
"உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும்
நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர்
இறப்பிலும் வாழ்வார்"
அன்பின் பிறப்பே! ஆசை மகனே
ஆறுதில்லையடா மனம் வேதனையால்
இனிய வார்த்தை பேசிய இளையவனே!
ஈடில்லை உனக்கொருவரும், தேவனின் பாதமடைந்தாய்
உறவுகள் ஏங்குதடா உன்னைக் காணாமல்
ஊட்டி வளர்த்தவர்கள் உள்ளம் சோர்வடைந்து
எங்கெல்லாம் தேடுகிறோம் ஏன்தான் எமைப்பிரிந்தாய்
ஐவர் நாம் அன்று அவனியில் அவதரித்தோம்
ஆசை மகளன்றும் அன்பு மகன் நீயின்றுமே
ஆண்டவர் பாதமடைந்து இன்றுடன் மூன்று மாதமல்லவோ
எங்கள் மகனின் இறுதிக்கிரியை அன்று எமது இல்லத்தில் பங்குக்கொண்டு அனைத்து வகையிலும் உதவிகள் புரிந்த, உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுவிஸ் நாட்டில் இருந்து உதவிகள் புரிந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் கூறுவதில் பெருமிதமடைகின்றோம்.
அன்னாரின் 3ம் மாத நினைவஞ்சலி 23-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12.00 மணியளவில் Restaurent & Bar, Hohe, Goten Strasse 21, 3018 Bern, Tel : 0041 31 832 0331, 004179 693 5597 எனும் முகவரியல் நடைபெறும், இதில் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

