Aruthal

மரண அறிவித்தல்

Photo of Anthonippillai Mary Stanislaus

In loving memory of

Anthonippillai Mary Stanislaus

Age 80September 11, 1937 – September 22, 2017

Born in
Ilavalai
Lived in
Gampaha Negombo, Vavu Thirunavankulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை மேரி ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவானப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கொட்பிறி, கொன்ஸ்ரன்ரைன்(ஜெறி), யோண்சன்(லண்டன்), சகாயதர்சினி(சகி- லண்டன்), அனெஸ்ரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வகரன்(செல்வன் - லண்டன்), சமந்தா, கொசியா(லண்டன்), ஜான்சி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற யோசப் மரியான்(றாகம), பேணடேற்(கனடா), Rev. Bro. மைக்கல் SSS (St. Philiphneri's Church, Colombo), லோறன்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சொர்ணராஜா, காலஞ்சென்ற மேரி ராணி(ஆயுர்வேத வைத்தியர்), அன்ரன் சிங்கராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனோறா, ஏட்றியன், சந்தோஷ், சாதனா, ஜோசுவா, அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 25-09-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணிக்கு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 65,
திருநாவற்குளம்,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.