5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Antony Sepastian
Age 73March 23, 1934 – March 26, 2007
- Born in
- Kayts
- Lived in
- Kayts
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனி செபஸ்ரியன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் - உபாகமம் (26:6)
அன்பான ஐயாவே உங்கள்
ஐந்தாண்டு நினைவுகளில் உங்கள்
பசுமையான நினைவுகளை
நினைவு கூர்கிறோம்.
காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்.
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது.
மனித வாழ்வில் இனிமையான
மென்மையான பொறுமையான சாந்தமான
பாசமுள்ள ஐயாவை
எமக்கு தந்த இறைவனுக்கு
தலை வணங்குகின்றோம்.
பாதுவா அந்தோனியின் பக்திமானே,
தர்மம், தானம் செய்வதில் தர்மவாளனே,
எங்களை கண்ணின் மணிபோல் காத்தவரே,
உமை ஏன் ஐயா இறைவன்
நொடிப்பொழுதில் அழைத்தார்.
எமை பெற்று வளர்த்த அகல் விளக்கே
விழிநீர் வடிய தேடுகிறோம்.
அலையோடு போராடி எமை
வளர்த்த ஐயாவே உம்மைச்
சுமந்து சென்ற அந்த
கொடிய நாளை
எண்ணி குமுறுகிறோம்.
அம்மாவின் உலகம் நீங்கள்...
எங்கள் எல்லோர்க்கும் எல்லாமாய்
இருந்த ஐயாவே
உங்களது பிறந்த நாளையும்
உங்களது செல்லப்பேத்தியின் பிறந்த நாளை
ஒரே நாளில் சந்தோஷமாக கொண்டாடி
மூன்றாவது நாள்
காணாமல் போனதென்னவோ.
காலத்தின் கட்டாயம் நோயின்
கொடுமையால் காலவன் அழைத்ததினால்
கண்மூடி செல்ல மனமின்றி
சென்றுவிட்டீரோ.
உங்களை மறக்கும்படி கனவில்
கூட வராமல் இருக்கிறீர்கள்.
உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு.
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்,
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்.
என்றும் உங்கள் நினைவுகளில்
கலந்திருக்கும் மனைவி,
மக்கள் - றஞ்சிதம், றஜி,
யுசி, றாயன்(ஜேர்மனி),
விஜி, பிறேமி.
— றாயன்(மகன் - ஜேர்மனி)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

