மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Kandasamy
Age 70March 13, 1946 – April 4, 2016
- Born in
- Karainagar Sinnaladi
- Lived in
- London, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு மட்டக்குளி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தசாமி அவர்கள் 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
புவனேந்திரன்(Kandasamy & Co), ஜெயந்திரன்(கனடா), நாகரூபி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலட்சுமி, செல்வராணி, பராசக்தி, புனிதவதி, காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, பொன்னம்பலம்(வர்த்தகர்- நொச்சியாகம) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமாரி, மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா, மற்றும் பத்மசிங்கம், தியாகராஜா, நவமலர், ராசரட்ணம், சொக்கலிங்கம், உமாதேவி, சோதிலிங்கம்(Coca-Cola- கிளிநொச்சி, கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவரட்தினம் அவர்களின் அன்புச் சகலனும்,
மங்கையற்கரசி அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
லக்ஷிகா, சேயோன், சௌமியா, மயூரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சதாசிவம் பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு(MPCS Kayts) சாவித்திரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதம்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
No. 65/339, Grow Island,
Mattakuliya,
Colombo - 15
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

