Aruthal

25ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Arumugam Nadarajah

In loving memory of

Arumugam Nadarajah

Age 47February 17, 1943 – February 16, 1991

Born in
Karainagar
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் நடராஜா அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இருபத்தைந்தாகியும் உங்களை
இழந்த சோகம் மாறவில்லை அப்பா
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் மாறாது
மறையாது உங்கள் அன்பும் பாசமும் அப்பா!

ஈரேழு வருடங்கள் தான் நம்மோடு இருந்தாலும்
உங்களோடு வாழ்ந்த காலம் தான்
பொற்காலம் எங்களுக்கு அப்பா!

நல்லதொரு கணவனாய் அன்பான தந்தையாய்
நாட்டில் பெயர் பூத்த வர்த்தகனாய் பார்ப்பதற்கு
சிறந்தவனாய் பழகுவதற்கு இனியவனாய் வாழ்ந்த
உங்களை நிதமும் தேடுகின்றோம் அப்பா!
நம் கண்களில் வழியும் கண்ணீரும் மனதில் நிறைந்த
சோகமும் என்றும் மறையாது அப்பா!

எங்கள் மனதில் என்றுமே தெய்வமாய் எங்களின்
வழிகாட்டியாய் நீங்கள் தான் அப்பா என்றும் உள்ளீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

உங்கள் நினைவுகளை சுமந்து நிற்கும் உங்கள் அன்பு மனைவி தனலட்சுமி,
பாசமிகு பிள்ளைகள், அன்பு மருமக்கள், ஆசைப் பேரப்பிள்ளைகள்.

வீட்டு முகவரி:
இல. 84/4,
சோயா வீதி,
யாழ் வீதி,
வவுனியா.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.