Aruthal

மரண அறிவித்தல்

Photo of Balasingam Linganathan

In loving memory of

Balasingam Linganathan

Age 78June 3, 1940 – September 20, 2018

Born in
Velanai
Lived in
Jaffna

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் லிங்கநாதன் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராஜா இரத்தினாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி(வசந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

வதனா(ஆசிரியை- யா/ சென்ஜேம்ஸ் மகளிர் பாடசாலை), ராஜினி(ஆசிரியை- கொ/ சைவமங்கையர் வித்தியாலயம்), பிறேமா(B.A), ரதினி(ஆசிரியை- யா/ கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயம்), பிறேமினி(Pharmacist- கனடா), அகிலன்(Director- Sri Vasantham Engineering), அஜந்தினி(Quantity Surveyor) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் மகேந்திரன்(பிரான்ஸ்), சுந்தரம், சந்திராவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் தர்மராணி, மைதிலி, நாகேஸ்வரன், புஸ்பலீலாவதி, சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தற்பரானந்தம், ஜெகதாம்பிகை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ரகுநாதன்(கணக்காளர்- யா/ மாவட்டச்செயலகம்), தர்மசொரூபன்(Executive Officer- Laboratory Equipment Company, Col-01), இளங்கீரன்(Project Manager- Access Project Pvt Ltd), உதயணன்(மாதவா ஸ்ரூடியோ),லோகீசன்(Technical Advicer- Government of Canada), Dr. சுஜித்தா(யா/ போதனா வைத்தியசாலை), சிவநேசன்(உதவி ஆணையாளர் உள்நாட்டு இறைவரி திணைக்களம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீகாயத்ரி, துவாரகன், துளசிகன், மதுர்ஷிகா, நாமகி, புகழ், கதிரோன், தனிஸ்கன், தனிஸ்கா, அவிரோன், பிரனேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 50/45,
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.