9ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
C. Selvarathinam
Age 51November 11, 1949 – November 17, 2000
- Born in
- Chavakachcheri
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி(Bremen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் உறைவிடமான அன்புள்ள அப்பாவே!!
உங்கள் பரிவான புன்னகையில் எம்மனதில் நிலவெறிக்கும்
பேசும் மொழியினிலே எவர் மனதும் ஊற்றெடுக்கும்
ஒளி சிந்தும் ஆதவனாய் நல்ல வழி காட்டியதால்
அவ்வழியே வாழ்கின்றோம் இமைப் பொழுதும் உமை மறவோம்.
நீங்கள் எம்மைப் பிரிந்து மறைந்து
இன்றுடன் ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன.
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள் எங்களுக்கு
பொற்காலமாகும், நற்காலமாகும்.
கடந்த காலம் எக்காலத்திலும் திரும்பிவரப் போவதில்லை
ஆனாலும் நீங்கள் எம்மை வாழவைத்து
மகிழ்வித்த காலத்தில் விட்டுச் சென்ற ஞாபகங்கள் ஏராளம் ஏராளம்.
ஒவ்வொரு ஞாபகச் சின்னமும் ஒவ்வொரு கதை சொல்லும்.
அவற்றுள் உங்கள் திருமுகத்தை தினமும் காண்கின்றோம்.
உங்களை எங்களால் மறக்க முடியாது.
மறக்கவும் மாட்டோம் மறவோம் மறவோம் மறவோமே!
ஆண்டவன் திருவடியில் அமைதியாய் நீங்கள் வாழ
ஆண்டாண்டாய் உங்கள் நினைவுடனே பிரார்த்திப்போம்.
உங்கள் ஆத்ம சாந்திக்கு வேண்டிப் பிரார்த்திக்கும்:
அன்பு மனைவி, மக்கள்.
— மனைவி, மக்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

