ஆறுதல்

9ம் ஆண்டு நினைவஞ்சலி

சி. செல்வரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சி. செல்வரத்தினம்

முன்னாள் ஆசிரியர் கற்குழி-சாவகச்சேரி

வயது 5111 நவம்பர், 1949 – 17 நவம்பர், 2000

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி(Bremen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசத்தின் உறைவிடமான அன்புள்ள அப்பாவே!!
உங்கள் பரிவான புன்னகையில் எம்மனதில் நிலவெறிக்கும்
பேசும் மொழியினிலே எவர் மனதும் ஊற்றெடுக்கும்
ஒளி சிந்தும் ஆதவனாய் நல்ல வழி காட்டியதால்
அவ்வழியே வாழ்கின்றோம் இமைப் பொழுதும் உமை மறவோம்.
நீங்கள் எம்மைப் பிரிந்து மறைந்து
இன்றுடன் ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன.
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள் எங்களுக்கு
பொற்காலமாகும், நற்காலமாகும்.
கடந்த காலம் எக்காலத்திலும் திரும்பிவரப் போவதில்லை
ஆனாலும் நீங்கள் எம்மை வாழவைத்து
மகிழ்வித்த காலத்தில் விட்டுச் சென்ற ஞாபகங்கள் ஏராளம் ஏராளம்.
ஒவ்வொரு ஞாபகச் சின்னமும் ஒவ்வொரு கதை சொல்லும்.
அவற்றுள் உங்கள் திருமுகத்தை தினமும் காண்கின்றோம்.
உங்களை எங்களால் மறக்க முடியாது.
மறக்கவும் மாட்டோம் மறவோம் மறவோம் மறவோமே!
ஆண்டவன் திருவடியில் அமைதியாய் நீங்கள் வாழ
ஆண்டாண்டாய் உங்கள் நினைவுடனே பிரார்த்திப்போம்.
உங்கள் ஆத்ம சாந்திக்கு வேண்டிப் பிரார்த்திக்கும்:
அன்பு மனைவி, மக்கள்.

— மனைவி, மக்கள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.