1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Chellathurai Thangammah
Age 76April 14, 1933 – May 18, 2009
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Mullai Puthukkudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னாரின், 1ம் ஆண்டு திதியும், ஆத்ம சாந்தி பிராத்தனையும் 06.06.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் உள்ள அவரது மகன் புஸ்பராசா அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.
கருவில் சுமந்த காலம் முதல் நம்மை
கண்ணின் இமையாகக் காத்த எங்களின் இதயக்கோயிலே!
பன்னிரெண்டு மாதம் பறந்தேறி விட்டதம்மா!
பக்கத்தில் நாம் இல்லையென்பதால்
பகல் கனவு போல் உள்ளது.
எங்களின் தங்கமான தங்க அம்மாவே!
எங்களின் அன்பு தாயின் முற்றத்தில் வந்து
தாகம் தீர்த்தோர் எத்தனை பேரம்மா!
எங்கள் அன்பு அம்மாவின் வீட்டிற்கு வந்து
விருந்தே உண்டோர் எத்தனை பேரம்மா!
அன்னமிட்ட கைகளுக்கும் அன்பு செய்த கண்களுக்கும்
கொடியவனின் கொடிய சூழ்ச்சியால்
ஊர் இழந்து, வீடு இழந்து, உற்றார், உறவினர் இழந்து
எட்டுப்பிள்ளைகளைப் பெற்ற எங்களின் இதய விளக்கே!
எவருமில்லாத நிலையில் கப்பலேறி
பதவியாவில் வந்து பரிதவித்து நின்ற போது
பக்கத்தில் நின்று பசியாற்ற யார் நின்றாரோ! நாமறியோம்.
மண்ணைவிட்டு விண்ணுக்கும் போக
முதல் மைந்தர்கள் யார் வருவாரோ
என்று எண்ணி, வழிமேல் விழி வைத்து
ஏமாந்து போனதை எண்ணி
நாம் இங்கே கலங்கி நிற்கின்றோம் அம்மா!
எங்கள் தெய்வமே பெற்ற பிள்ளைகள்
நாம் பக்கத்தில் நின்று பால் பருகி அனுப்ப
முடியாத பாவிகளாக இங்கே புலம்பி வாடுகின்றோம் தாயே!
— பிள்ளைகள்(பிரித்தானியா)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

