ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்லத்துரை தங்கம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்துரை தங்கம்மா

வயது 7614 ஏப்ரல், 1933 – 18 மே, 2009

பிறந்த இடம்
புதுக்குடியிருப்பு
வாழ்ந்த இடம்
புதுக்குடியிருப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னாரின், 1ம் ஆண்டு திதியும், ஆத்ம சாந்தி பிராத்தனையும் 06.06.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் உள்ள அவரது மகன் புஸ்பராசா அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.

கருவில் சுமந்த காலம் முதல் நம்மை
கண்ணின் இமையாகக் காத்த எங்களின் இதயக்கோயிலே!
பன்னிரெண்டு மாதம் பறந்தேறி விட்டதம்மா!
பக்கத்தில் நாம் இல்லையென்பதால்
பகல் கனவு போல் உள்ளது.

எங்களின் தங்கமான தங்க அம்மாவே!
எங்களின் அன்பு தாயின் முற்றத்தில் வந்து
தாகம் தீர்த்தோர் எத்தனை பேரம்மா!
எங்கள் அன்பு அம்மாவின் வீட்டிற்கு வந்து
விருந்தே உண்டோர் எத்தனை பேரம்மா!
அன்னமிட்ட கைகளுக்கும் அன்பு செய்த கண்களுக்கும்
கொடியவனின் கொடிய சூழ்ச்சியால்
ஊர் இழந்து, வீடு இழந்து, உற்றார், உறவினர் இழந்து
எட்டுப்பிள்ளைகளைப் பெற்ற எங்களின் இதய விளக்கே!
எவருமில்லாத நிலையில் கப்பலேறி
பதவியாவில் வந்து பரிதவித்து நின்ற போது
பக்கத்தில் நின்று பசியாற்ற யார் நின்றாரோ! நாமறியோம்.

மண்ணைவிட்டு விண்ணுக்கும் போக
முதல் மைந்தர்கள் யார் வருவாரோ
என்று எண்ணி, வழிமேல் விழி வைத்து
ஏமாந்து போனதை எண்ணி
நாம் இங்கே கலங்கி நிற்கின்றோம் அம்மா!
எங்கள் தெய்வமே பெற்ற பிள்ளைகள்
நாம் பக்கத்தில் நின்று பால் பருகி அனுப்ப
முடியாத பாவிகளாக இங்கே புலம்பி வாடுகின்றோம் தாயே!

— பிள்ளைகள்(பிரித்தானியா)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.