1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Durairatnam Dhlipkumar
Age 50February 18, 1960 – February 23, 2010
- Born in
- Valveddi
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட துரைரட்ணம் திலீப்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி (திவசம்).
அப்பா நீங்கள் எம்மைவிட்டு
சென்று ஆண்டொன்று
ஆகிவிட்ட போதிலும்,
உங்கள் நினைவுகள் எம் நெஞ்சில்
கடல் அலைபோல
தினம்தினம் வந்து செல்கின்றதே..
அப்பா நீங்கள் எதை
கேட்டாலும் தருவீர்களே
உங்கள் மனம் கோணாமலே...
துயரம் இதை நாங்கள் கேட்காமலே
கொடுத்துவிட்டு சென்றீர்களே... எதற்காக?
அழுதிட கூடாது என்று
அறிவுரை சொல்வீர்களே..
அழுகையை நீங்களே தந்துவிட்டு சென்றீர்களே...
அப்பா, உங்கள் நினைவுகள் ஓராண்டல்ல
ஒருநூறு ஆண்டானாலும்
எம் நெஞ்சில் இருந்து நீங்காதப்பா..
உங்கள் ஆத்மா சாந்தி
அடைய என்றும் இறைவனை வேண்டிநிற்கும்
மனைவி, பிள்ளைகள் மற்றும் அம்மா.
அன்னாரின் திதி 13.03.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று லாச்சப்பல் மண்டபம், முத்துமாரி அம்மன் கோவில் என்னும் முகவரியில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறிய தருகின்றோம்.
சாந்தி... சாந்தி... சாந்தி....
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

